கேப்டன் என்று அழைக்கப்படும், விஜயகாந்த்தின் பெருந்தன்மையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் கேள்விபட்டிருப்பார்கள். தன்னிடம் பசி என்று யார் வந்தாலும் தாங்கிக்கொள்ள மாட்டார் விஜயகாந்த். உடனே அவரை சாப்பிட வைத்துவிட்டு வயிறார அனுப்புவார் விஜயகாந்த்.
அதே போல் தன்னிடம் உதவி என்று வருபவர்களை காக்க வைக்காமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதனை செய்துகொடுத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பார் விஜயகாந்த். விஜயகாந்த்தின் இந்த பெருந்தன்மையை குறித்து சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.
நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்
விஜயகாந்த் நடிகர் சங்கத்தலைவராக தேர்தெடுக்கப்பட்ட போது சங்கத்திற்கு பல கோடி ரூபாய் கடன் இருந்தது. இந்த கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என நினைத்த விஜயகாந்த், டாப் நடிகர்களில் இருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் வரை பலரையும் ஒன்று திரட்டி மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தலாம் எனவும், அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைக்கலாம் எனவும் முடிவு செய்தார்.
அதனை தொடர்ந்து பல நடிகர்களையும் ஒன்று திரட்ட தொடங்கினார். அப்போது ரஜினி கலைநிகழ்ச்சிகளில் பங்குகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்தது.
ரஜினியிடம் அடம்பிடித்த விஜயகாந்த்
உடனே ரஜினி வீட்டிற்குச் சென்ற விஜயகாந்த், தரையில் அமர்ந்துகொண்டாராம். அதனை பார்த்த ரஜினிகாந்த்திற்கு சங்கடமாக இருந்திருக்கிறது. “ஷோபாவில் உட்காருங்க விஜி” என்று ரஜினி பல முறை கூறியும் “நீங்க கலை நிகழ்ச்சிக்கு வந்தால்தான் நான் எழுந்திருப்பேன்” என அடம்பிடித்தாராம். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் கலை நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டாராம்.
தயாரிப்பாளரிடம் அகப்பட்ட அஜித்
இந்த சமயத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் மாட்டிக்கொண்டாராம். அதாவது அந்த திரைப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என கண்டிப்போடு கூறிவிட்டராம் தயாரிப்பாளர்.
“கமல், ரஜினி போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் செல்கிறார்கள். நான் போகவில்லை என்றால் எனக்கு கெட்ட பெயர் வந்துவிடும்” என தனது நிலையை தயாரிப்பாளரிடம் கூறிப்பார்த்தாராம் அஜித். அப்படியும் அந்த தயாரிப்பாளர் மனம் இறங்கி வரவில்லையாம். அந்த தயாரிப்பாளர் அஜித்தின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் அஜித்திற்கு பொருளாதார ரீதியாக சில பிரச்சனைகளும் இருந்ததாம். ஆதலால் நம்மால் கலை நிகழ்ச்சிகளுக்கு செல்ல முடியாது என முடிவு எடுத்தாராம் அஜித்.
அசிங்கப்படுத்திய அஜித்
“கலை நிகழ்ச்சியில்தான் கலந்துகொள்ள முடியவில்லை, நம்மால் முடிந்த உதவியையாவது செய்யலாம்” என்று நினைத்த அஜித், விஜயகாந்த்தை சந்தித்து தன்னால் கலந்துகொள்ள முடியாது என கூறிவிட்டு அவரது கையில் பத்து லட்ச ரூபாயை தந்தாராம். இதனை பார்த்த விஜயகாந்த் அந்த பணத்தை அவரிடமே திரும்பக்கொடுத்துவிட்டு “அஜித், நீங்க வராதது கூட எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பணத்தை கொடுத்து கலை நிகழ்ச்சிக்கு வரும் நடிகர்களை அவமானப்படுத்துகிறீர்களே. இதைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என வேதனையோடு கூறினாராம்.
இதையும் படிங்க: “ரஜினி ஹீரோவா நடிக்கனுமா?”… அதிர்ச்சி அடைந்த பிரபல தயாரிப்பாளர்… அடம்பிடித்த மகேந்திரன்…
அஜித்தின் அவலநிலை
இதனை கேட்ட அஜித், மனம் உடைந்து போனாராம். அதன் பிறகு தான் ஒரு தயாரிப்பாளரிடம் வசமாக சிக்கியுள்ளதாகவும், மேலும் பல பிரச்சனைகளில் இருப்பதாகவும் தன்னுடைய அவல நிலையை விஜயகாந்த்திடம் எடுத்துக்கூறியுள்ளார் அஜித்.
அதனை கேட்டப் பிறகுதான் விஜயகாந்த் அஜித்தின் நிலைமையை புரிந்துகொண்டாராம். ஆனால் அந்த சமயத்தில் விஜயகாந்த்திற்கும் அஜித்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக பல பத்திரிக்கைகள் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…
ஐயப்பனை கொச்சைப்படுத்தும்…
நடிகர் சூர்யாவை…
பைரவி படத்தின்…