நான் சாதாரண மிடிஸ் கிளாஸ் பையன்!.. அஜித் பீல் பண்ணி பேசிட்டாரே!….

by சிவா |   ( Updated:2025-04-29 20:56:36  )
ajithkumar
X

அஜித் சினிமாவில் நடிக்க துவங்கி 30 வருடங்கள் ஆகிவிட்டது. அமராவதி படத்தில் துவங்கி இப்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். விஜயை போல இவருக்கும் அதிக ரசிகர் கூட்டம் இருக்கிறது. அமராவதியில் அறிமுக நடிகராக இருந்த அஜித் இப்போது பத்ம பூஷன் விருது வாங்கியிருக்கிறார்.

அஜித் மற்ற நடிகர்களை போல இல்லை. சினிமா தொடர்பான எந்த நிகழ்விலும் அவர் கலந்துகொள்வது இல்லை. ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ அவர் பேட்டி கொடுப்பது இல்லை. தான் நடிக்கும் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. அதற்கு என்ன காரணம் எனவும் அவர் சொல்வதும் இல்லை.

ஷூட்டிங் இருந்தால் அங்கிருப்பார். இல்லையென்றால் குடும்பத்துடன் இருப்பார். இது இரண்டும் இல்லையென்றால் பைக் ஓட்டுவது, கார் ரேஸில் கலந்துகொள்வது போன்ற தனக்கு பிடித்த எதேனும் ஒன்றை செய்து கொண்டிருப்பார். இதுதான் அஜித்தின் உலகம். பெரிய நடிகர்களிடம் இருக்கும் எந்த பந்தாவும், தலைக்கணமும் அஜித்திடம் பார்க்கவே முடியாது. மிகவும் எளிமையானவர். பண்புடம் நடந்து கொள்வார் என இவருடன் நடிக்கும் பலரும் சொல்கிறார்கள்.

சமீபத்தில் டெல்லி சென்று ஜனாதிபதி கையில் விருது வாங்கியிருக்கிறார் அஜித். அந்த விழாவுக்கு தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளையும் அழைத்து சென்றார். அஜித் விருதை வாங்கிய போது அவர்கள் மகிழ்ச்சியோடு எழுந்து நின்று கைத்தட்டி சந்தோஷப்பட்டார்கள்.

விருது வாங்கிய பின் பேசிய அஜித் ‘எனது கனவு வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருகிறேன். யாராவது கனவில் இருந்து எழுப்பி விட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கிறது. விருது அறிவிக்கப்பட்ட போது கற்பனை போல இருந்தாது. சரியான பாதையில்தான் செல்கிறோம் என தோன்றியது.

என் பெயருக்கு பின்னால் அடைமொழி வைத்துக்கொள்வதை விரும்பவில்லை. என்னை அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ அழைத்தால் போதும். மற்ற வேலைகளை போல நடிகராக இருப்பதும் ஒரு வேலைதான். அதற்காக சம்பளம் வாங்குகிறேன். மனதளவில் இன்னும் என்னை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராகவே உணர்கிறேன். என் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு எளிமையாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

என் மனைவி ஷாலினி எனக்காக பல தியாகங்களை செய்திருக்கிறார். நான் தோல்விகளை சந்தித்தபோதும் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் அவர்தான்’ என பேசியிருக்கிறார்.

Next Story