”சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது...” தல அஜித் சொன்ன நச்சுனு ரெண்டு விஷயம்

வலிமை படப்பிடிப்பு அனுபவம் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச்.வினோத், ”ஹெல்மெட் போட்டுத்தான் பைக் ஓட்டணும். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது தவறு, சினிமாவுக்காக ரூல்ஸை மாத்தக்கூடாது” என தல அஜித் வலிமை படப்பிடிப்பில் கூறியதாகப் பகிர்ந்துள்ளார்.

வலிமை படம் பல போராட்டங்களுக்குப் பின்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. ரசிகர்களின் கோரிக்கையை அடுத்து படம் குறித்து அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் தல ரசிகர்கள் படு ஜாலியாக இருக்கின்றனர். மேலும், படம் வரும் பொங்கலுக்கு வெளியிட உள்ளது. இந்த நிலையில், படப்பிடிப்பு அனுபவம் குறித்தும், தல அஜித் குறித்தும் பட இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டி அளித்து வருகிறார்.

அதன்படி, ”ஷூட்டிங்கில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கப்போறீங்க, அது நீங்கதான்னு ரசிகர்களுக்கு தெரியணும். ஹெல்மெட்டைக் கழட்டிட்டு பைக் ஓட்டுங் சார்” கேட்டேன். ’படத்துக்காக ரூல்ஸ் மாத்தக் கூடாது. ஹெல்மெட் போட்டுதான் வண்டி ஓட்டணும்’ சொல்லி இருக்கிறார். அதேபோல், காரில் ஒரு சீனில் ஹாரன் அடித்துக் கொண்டே டிரைவ் பண்ண சொன்ன போதும் மறுத்து விட்டார். “தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது நியூசென்ஸ், ஹாரன் சவுண்ட் பலரையும் பாதிக்கும். நல்ல டிரைவ் பண்ணத் தெரிஞ்சவங்க யாரும் ஹாரன் தேவையில்லாமல் அடிக்கமாட்டங்க” என தல அஜித் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

தான் செய்தால் தனது ரசிகர்களும் அதைப் பின்பற்றுவார்கள். முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இது போன்ற செயல்களில் தல அஜித் அதிகம் ஈடுபடுவதில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், எப்போதும் மற்றவர்கள் பற்றியே அவர் அதிகம் யோசிக்கிறார் என ஹெச்.வினோத் கூறியுள்ளார். உண்மையிலே தல அஜித் வேற மாதிரிதான்... ரியல் லைப்லையும் சரி... ரீல் லைப்லையும் சரி...

 

Related Articles

Next Story