அஜித் & ஷாலினியை பெருமைப்பட வைத்த மகன் ஆத்விக்.. என்ன பண்ணிருக்காருனு பாருங்க ????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார் மகன் ஆத்விக் குறித்த வியக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 250 கோடி ரூபாய் வசூலை துணிவு படம் வசூலித்தது.
நடிகர் அஜித் குமார் அவ்வப்போது பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட உலகச் சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார்.
மேலும் அஜித் நடிக்கும் அடுத்த விடாமுயற்சி படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளது.

சமீபத்தில் நடிகர் அஜித்,"ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கி உள்ளார். 17.05.2023 அன்று இந்த நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் இருவரும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் மகன் ஆத்விக் அஜித்குமார், சென்னையின் FC அணியின் ஜூனியர் அணியில் இடம் பிடித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. சமீபத்தில் துபாயில் நடந்த கேம்ப்பில் ஆத்விக் அஜித்குமார் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
