இது ஃபேமிலி டைம்!.. அஜித் பொண்ணு இவ்ளோ வளந்துட்டாரா?!.. ஏகே ரீசண்ட் கிளிக்ஸ்...
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய பெரிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். சாக்லேட் பாயாக பல படங்களில் நடித்து பின் ஸ்டைலீஸ் ஹீரோவாக மாறி தற்போது மாஸ் ஹீரோவாகவும் மாறியுள்ளார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர். தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்த பின்னரும் இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.
இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு நிகராக ரசிகர்களை உடையவராக அஜித் மாறியுள்ளார். படப்பிடிப்பு முடிந்தால் வீடு, மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது என நல்ல குடும்ப தலைவனாகவும் இருக்கிறார். மேலும், பைக் ஓட்டுவதில் ஆர்வமுள்ள அஜித் அவ்வப்போது பைக்கை எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
சமீபத்தில் கூட பைக்கில் உலகம் முழுவதும் சுற்றும் பயணத்தை துவங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை அவர் கடந்து சென்றார். தற்போது இந்தியா முடிந்த அடுத்த நாட்டுக்கு செல்ல தயாராகியுள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி ஷாலினி , மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் அவர் நேரம் செலவழித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்கள் நேரம் செலவழித்த இடம் வெளிநாடு என்பதால் புது வருடத்திற்காக அவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: நடுராத்திரியில் ஒரு அமானுஷ்யம்… வடிவேலுவை நோக்கி நடந்து வந்த வெள்ளை உருவம்… கேட்கவே பயங்கரமா இருக்கே!!
அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.