Connect with us

Cinema News

அஜித் ரசிகர்கள் அட்டண்டன்ஸ் போட வாங்க!.. இந்த முறை மிஸ் ஆகாது.. விடாமுயற்சி அப்டேட் எப்போ தெரியுமா?

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் என பீதியையே கிளப்பி விட்டனர். ஆனால், அவர் தனது மகன் ஆத்விக்குடன் அதிகமான நேரத்தை செலவிட்டு வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அஜித் குமார் இஸ் ஆல்ரைட் என்பதை ஷாலினி தெரிவித்து விட்டார்.

என்னமோ ஏதோ என பதறிய அஜித் ரசிகர்கள் ஷாலினி வெளியிட்ட அந்த சூப்பர் கூல் போட்டோவை பார்த்து சில்லாகி விட்டனர். அடுத்து அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு என்னவென்றால் விடாமுயற்சி படத்தின் அட்டகாசமான அப்டேட் தான்.

இதையும் படிங்க: அட்லீயோட அடுத்த பட டிஸ்கஷன்!.. எந்த ஹீரோ கூட நடத்துறாரு பாருங்க!.. செம வைரலாகுது!..

அந்த குறையை ஏன் தனது ரசிகர்களுக்கு வைக்க வேண்டும் என நினைத்த அஜித் குமார் அதற்கும் ஓகே சொல்லி விட்டார் என்றே தெரிகிறது. நாளை அஜித் குமார் ரசிகர்களுக்கு விடாமுயற்சி படத்தில் இருந்து அட்டகாசமான அப்டேட் வெளியாகப் போகிறதாம்.

சினிமா வட்டாரத்தில் இருந்து தற்போது கசிந்த தகவலை அறிந்த ரசிகர்கள் விடாமுயற்சி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: எந்த ஆங்கிளில் பார்த்தாலும் செம ஹாட்டு!… சிக்குன்னு காட்டி இளசுகளை இழுக்கும் அனுபமா…

இந்த முறையாவது லைகா நிறுவனம் எந்தவொரு ஏமாற்றத்தையும் அஜித் ரசிகர்களுக்கு கொடுக்காமல் நல்லவொரு தரமான அப்டேட்டை கொடுக்கும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். அதிக பட்சமாக அஜித்தின் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இல்லையென்றால் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ என்கிற அறிவிப்பு வெளியானால் கூட அஜித் ரசிகர்கள் ஹேப்பி ஆகி விடுவார்கள். விரைவில் விடாமுயற்சி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் ஆரம்பமாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top