லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..

by Saranya M |   ( Updated:2024-04-04 10:15:21  )
லைகாவை அலற விட்ட அஜித் குமார்!.. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை!.. பம்மிய தயாரிப்பு நிறுவனம்?..
X

விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முதலில் அந்த விபத்து வீடியோவை வெளியிடாமல், அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருப்பதற்கு பின்னணியில் மைக்கா நிறுவனத்திற்கான எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க: லியோவுக்கு ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ்!.. தலைவர் 171க்கு இந்த ஹாலிவுட் படமா?.. என்னய்யா லோகி என்ன ஆச்சு?..

கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக அஜித்குமார் இந்தப் படத்தின் அப்டேட் கொடுக்காமல் அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியானது.

மேலும், ஹைதராபாத்துக்கு சென்று கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாளை அஜித் கொண்டாட காரணமே குட் பேட் அக்லி தயாரிப்பாளரை சந்தித்து அட்வான்ஸ் வாங்கி விட்டு வரத்தான் அங்கே சென்றிருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சரியா நடிக்க முடியல!.. கதறி அழுத நடிகர் திலகம்!.. ஆறுதல் சொல்லி தூக்கிவிட்ட இயக்குனர்!..

லைகா நிறுவனம் படப்பிடிப்பு இல்லாத நிலையில், இன்னமும் நடிகர் அஜித்துக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அதை ஒழுங்காக தராமல் படத்தின் பட்ஜெட்டிலும் கை வைத்து விட்டதால் கடுப்பாகி தான் எந்தளவுக்கு இந்த படத்துக்காக கஷ்டப்பட்டுள்ளேன் பாருங்க என விபத்து நடந்த வீடியோவையே அஜித் வெளியிட்டுள்ளார் என்றும் செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

நடிகர் அஜித்தின் அதிரடி முடிவை அறிந்துக் கொண்ட லைகா நிறுவனம் விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் விட்டால், ஒட்டுமொத்த படத்தின் காட்சிகளையும் அஜித் வெளியிட்டு வீணடித்து விடுவார் என நினைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கவும், அஜித்துக்கு தரவேண்டிய சம்பளத்தில் ஒரு பகுதியையும் தற்போது ரிலீஸ் செய்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தில் நடந்த மிகப்பெரிய விபத்து… ஆனா இதான் கஷ்டமா இருக்கு… ஓபனாக சொன்ன சுரேஷ்சந்திரா..

Next Story