300 பேர் முன்னாடி அஜித் என் காலில் விழுந்தார்!.. சொல்லித்தான் ஆகணும்!.. அதிரவிட்ட நடிகர்...

by Rohini |   ( Updated:2024-02-22 14:22:58  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தை மார்ச், ஏப்ரல் மாதத்திற்குள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என படக்குழு தீவிரமாக வேலை பார்த்து வருகிறது.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலமாக படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டு இப்போதுதான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி சமீபகாலமாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருந்தாலும் அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டாக்டர் பட்டம் கொடுக்காத அந்த பல்கலைக்கழகம்!.. காரணம் இதுதானாம்!..

இந்த நிலையில் பிரபல மூத்த நடிகரான டெல்லி கணேஷ் அஜித் குறித்து சில தகவல்களை கூறினார். அதாவது அஜித் ‘கழுவுற தண்ணில நழுவுற மீனு’ என குறிப்பிட்டார். அதற்கு காரணம் எந்த பிரச்சினையிலும் தலையிட மாட்டாராம். அப்படியே செட்டிற்கு பிரச்சினை வந்தாலும் அவர் செல்போனை காதில் வைத்த படியே நடந்து போய்விடுவாராம். அவர் குடும்ப விஷயங்களை பேசுவார். நம்ம குடும்ப விஷயத்தை சொன்னால் கேட்பார்.

மற்றபடி வேறு எதிலும் தலையிட மாட்டாராம். அஜித்துடன் பல படங்களில் டெல்லி கணேஷ் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் நல்ல பழக்கம் இருக்கிறதாக டெல்லி கணேஷ் கூறினார். நேர் கொண்ட பார்வை படத்தில் நடிக்க டெல்லி கணேஷ் செட்டிற்கு போகும் போது அஜித் டையலாக் பேப்பரை பார்த்து படித்துக் கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: கும்முன்னு இருக்கியே குமுதா!.. கொழுக் மொழுக் அழகை காட்டி இழுக்கும் நந்திதா!..

அருகில் டெல்லி கணேஷை பார்த்ததும் ‘அப்பா எப்போ வந்தீங்க? நல்லா இருக்கீங்களா’ என கேட்டு 300 ஆர்ட்டிஸ்ட் சுற்றி இருக்க அதை எதையும் பற்றி யோசிக்காமல் டெல்லி கணேஷ் காலில் விழுந்தாராம். இதெல்லாம் ரெக்கார்டு. அதனால் டிவி முன்னாடி சொல்லியே ஆகனும் என டெல்லி கணேஷ் கூறினார்.

Next Story