
Cinema News
ஃபிகருக்காக மணிரத்னம் படத்தில் இருந்து வெளியேறிய அஜித்… ஆனா அது ஷாலினி கிடையாது..
அஜித்குமார் தமிழில் “அமராவதி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அதனை தொடர்ந்து “பாசமலர்கள்”, “பவித்ரா” போன்ற படங்களில் நடித்த அஜித். விஜய்யுடன் இணைந்து “ராஜாவின் பார்வையிலே” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “ஆசை”, “கல்லூரி வாசல்”, போன்ற திரைப்படங்களில் நடித்தார் அஜித். இத்திரைப்படங்களுக்கு பிறகு வஸந்த் இயக்கிய “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இத்திரைப்படத்தை மணி ரத்னம் தயாரித்திருந்தார்.

Nerukku Ner
“நேருக்கு நேர்” திரைப்படத்தில் விஜய்யும் அஜித்தும் இணைந்து நடித்தவாறு பல காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில்தான் “காதல் கோட்டை” திரைப்படத்தின் வாய்ப்பும் வந்தது. அந்த படத்தில் நடிகை ஹீரா நடிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது.
அந்த காலகட்டத்தில் ஹீராவும் அஜித்தும் காதலித்து வந்தார்கள். ஆதலால் “நேருக்கு நேர்” திரைப்படத்தில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் வந்ததாம். ஆதலால்தான் அத்திரைப்படத்தில் அஜித் நடிக்க முடியாமல் போனதாம்.

Ajith and Heera
அதனை தொடர்ந்து இயக்குனர் வஸந்த், அஜித் ஏற்று நடித்த ரோலுக்கு பிரசாந்த்தை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தார். அதன்படி பிரசாந்த்தை அணுகியபோது அவர் ஷங்கரின் “ஜீன்ஸ்” படத்தில் ஒப்பந்தம் ஆனதால் அவரால் நடிக்க முடியவில்லையாம்.

Vasanth
அதனை தொடர்ந்து பிரபு தேவாவை அணுகியிருக்கிறார் வஸந்த். ஆனால் அவரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு பிறகுதான் சிவக்குமாரை சந்தித்து அவரது மகனான சரவணனை நடிக்க வைப்பதற்கான ஒப்புதலை வாங்கியிருக்கிறார். அப்படித்தான் சூர்யா என்ற சரவணன் “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

Nerukku Ner
அஜித்தும் ஹீராவும் சில காலம் காதலித்து வந்த நிலையில் இருவருக்குள்ளும் பல விஷயங்கள் ஒத்து வராத காரணத்தினால் இருவரும் தங்களது காதலை முறித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷங்கரின் பிரம்மாண்ட வெற்றி படத்தில் இருந்து விலகிய சரத்குமார்… அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?