
Cinema News
’பிரியமுடன்’ படம் பார்த்து அஜித் என்னிடம் வந்து ஒன்னு கேட்டாரு…! இயக்குனர் கூறிய சுவாரஸ்ய தகவல்…
விஜய் நடித்து அவரின் கெரியரில் 19 வது படமாக வெளிவந்தது தான் ‘பிரியமுடன்’ படம். இந்த படம் வெளியானதுக்கு அப்புறம் தான் விஜய் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடும்போது பிரியமுடன் விஜய் என்று போடுவாராம். அந்த அளவுக்கு பிரியமுடன் படம் விஜய்க்கு நெருக்கமான படமாக அமைந்தது.
1998 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தின் க்ளைமாக்ஸ் விஜய்க்கு எதிர்மறையாக இருந்ததால் தான் படம் பெருமளவில் வெற்றி பெற்றது.ஆனால் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் படம் எடுக்கும் போதே பாஸிட்டிவாக எடுக்கலாமே என யோசித்தாராம். அவர் கூறியபடி எடுத்திருந்தால் விஜயின் வளர்ச்சிக்கு அதுவே காரணமாக இருந்திருக்கும்.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் புதிய இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தார் விஜய். அப்படித்தான் விஜய்யின் கண்களில் சிக்கினார் இயக்குனர் வின்சென்ட் செல்வா. படத்தின் கதையை சொன்ன செல்வா விஜய்க்கு பிடித்து போக படப்பிடிப்பு ஆரம்பமானதாம். ஆனால் இந்த படத்திற்கு முன் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற வெற்றி படங்களை கொடுத்த விஜய்க்கு இந்த படம் அவரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என கருதிய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடித்தார் விஜய்.
இந்த படத்திலும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றார். இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் அஜித் ஷாலினியிடம் இந்த படத்தை எடுத்த இயக்குனரிடம் சேர்ந்து நானும் ஒரு படம் நடிக்க வேண்டும் என கூறி அவருக்கு போன் செய்து வரவழைத்தாராம். அவரிடம் அஜித் படம் வேற லெவல எடுத்துருக்கிறீர்கள். படம் பார்த்தேன். சூப்பரா இருக்கு என்று சொன்னாராம் அஜித். அவர் அந்த சமயம் வாலி படப்பிடிப்பில் இருந்தாராம் .அஜித் சொன்னது மிகப் பெரிய மகிழ்ச்சியை தந்தது எனக் கூறினார் வின்சென்ட் செல்வா.