Connect with us

அஜித் ஐரோப்பிய பயண ரகசியம்…! புகைப்படங்களை வெளியிட்டதன் பின்னனி காரணம் தெரியுமா…?

ajith_main_cine

Cinema News

அஜித் ஐரோப்பிய பயண ரகசியம்…! புகைப்படங்களை வெளியிட்டதன் பின்னனி காரணம் தெரியுமா…?

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித். போனிகபூர் தயாரிப்பில் நடிக்கும் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

ajith1_cine

தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித் திடீரென சொந்த விடுமுறை பயணமாக லண்டன் சென்றார். அங்கு பைக் ரைடில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து வைரலானது.

ajith2_cine

இதை பார்த்த சிலபேர் இவராலயே படப்பிடிப்பு தடைபடுகிறது. ரிலீஸ் தேதியும் தள்ளிப் போவதும் இவரால் தான் போல என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் காரணம் அதுவல்ல. 52 நாள்கள் படப்பிடிப்பில் தன்னுடயை காட்சிகளை முடித்து விட்டுதான் போயிருக்கிறாராம். மேலும் சில காட்சிகளுக்கு வேறொரு கெட்டப்பில் வர இருக்கிறாராம்.

ajith3_cine

அந்த கெட்டப் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காகவே புகைப்படங்களை வெளியிட்டதாகவும் இருந்த கெட்டப்பிலயே பைக் ரைடை முடித்துவிட வேண்டும் என்பதற்காகவும் தான் லண்டன் சென்றாராம். வந்து புதிய கெட்டப்பில் தோன்றும் அஜித்தை வெளியில் இனி ரிலீஸ் ஆகிற வரைக்கும் பார்க்க முடியாது எனவும் செய்திகள் வருகின்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top