Connect with us
ajith

Cinema News

தல நீ வேற லெவல் போ!.. அசைர்பைசானில் அஜித்!.. வெளியான அடுத்த போட்டோ!..

Ajith kumar: கடந்த சில நாட்களாகவே நடிகர் அஜித் அசர்பைசானில் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. துணிவு படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், விஜய் இப்போதுதான் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

ஏனெனில், பைக்கில் உலகை சுற்றி வர ஆசைப்பட்ட அஜித் சில நாடுகளில் சுற்றிகொண்டிருந்தார். ஒருபக்கம், விக்னேஷ் சிவன்தான் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு அதன்பின் அவர் தூக்கப்பட்டு மகிழ்திருமேனி பெயரை சொன்னார்கள். ஆனால், படத்தின் கதை இதுதான் என முடிவு செய்யவே 6 மாதங்கள் ஆனது. படத்தின் தலைப்பு விடாமுயற்சி என அறிவித்ததோடு சரி.

இதையும் படிங்க: விஜயுடன் சேர்ந்து நடிப்பேன்.. ஆனா ஒரே கண்டிஷன்!.. பல வருடங்களுக்கு முன்பே பதில் சொன்ன அஜித்..

படப்பிடிப்பை துவங்கவே இல்லை. அதன்பின் ஒருவழியாக அசர்பைசான் நாட்டில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கியது. முழு படத்தையும் அங்கேயே முடித்துவிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அங்கு பல தடங்கல்களை படக்குழு சந்திக்க வேண்டியிருந்தது. மணல் புயல், பனிப்பொழு, மழை என பல நாட்கள் படப்பிடிப்பு தாமதமானது.

ajith

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், பிக்பாஸ் புகழ் ஆரவ் என பலரும் நடித்து வருகிறார்கள். ஆனாலும், படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், அசர்பைசானில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டும் தொடர்ந்து வெளியாகி வந்தது.

இதையும் படிங்க: அப்போ ‘கோட்’ படத்திலும் அந்த சீன் இருக்கும்! முத்தக்காட்சி பற்றி நடிகை வெளியிட்ட பதிவு

படம் தொடர்பான அப்டேட் எதுவும் இல்லையே என்கிற வருத்தத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு அந்த புகைப்படங்கள் மகிழ்ச்சியை கொடுத்தது. அஜித்தும் ஜீன்ஸ், டீசர்ட் அல்லது கோட் அணிந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் என செம ஸ்டைலாக இருந்தார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வந்தனர்.

ajith

இந்நிலையில், அஜித்தின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஜீன்ஸ் டீசர்ட், கூலிங்கிளாஸ் என அஜித் செம ஸ்டைலாக இருக்கிறார். அஜித் உட்பட விடாமுயற்சி படக்குழு சமீபத்தில் சென்னை திரும்பிவிட்டது. சில நாட்களில் துபார் அருகே உள்ள சார்ஜாவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

ajith kumar

 

google news
Continue Reading

More in Cinema News

To Top