ஷாலினிக்கு முன்னர் அஜித் காதலித்த பெண் பற்றி தெரியுமா.?! அவரே போட்டுடைத்த உண்மை.!

நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினி இருவரும் நடிக்கும் காலத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அமர்க்களம் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும், அதன் பிறகு இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் நமக்கு தெரியும்.

அதேபோல் சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்னவென்றால், நடிகர் அஜித்குமார் ஷாலினியை காதலிப்பதற்கு முன்னர் வேறு ஒரு நடிகையை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியாகின.

அந்த நடிகை வேறுயாருமல்ல அஜித்குமாரின் ஆரம்பகால படங்களில் நடித்து வந்த ஹீரா எனும் நடிகை. அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் போன்ற படங்களில் இரண்டாவது ஹீரோயினாக அவர் நடித்து இருப்பார்.

இதையும் படியுங்களேன் - உங்க ரேஞ்சுக்கு நீங்க காமெடியான நடிக்கலாமா.!? சிவகார்த்திகேயனை உசுப்பிவிட்ட ‘அந்த’ இயக்குனர்.!?

அந்த சமயம் இருவரும் காதலித்து வந்ததாக பத்திரிகைகளில் தகவல் வெளியாகின. இதனை ஒரு பேட்டியில் பத்திரிக்கையாளர்கள் கேட்கையில், அஜித் கோபமாக, 'ஆமாம் நான் ஹீராவை காதலிக்கிறேன்.' என்று கோபத்துடன் வார்த்தைகளை விட்டுள்ளார்.

அதன் பிறகு ஏதேனும் காரணங்களால் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்து விட்டனர். பிறகு இவர்கள் இருவரது காதல் முறிந்து விட்டதாக அப்போது கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

அதன்பின்னர்தான் நடிகை ஷாலினியுடன் அஜித் காதல் வயப்பட்டு, அந்த காதல் திருமணத்தில் கைகூடியது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை திரையுலகில் நிலைத்து நிற்கும் காதல் திருமண ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்-ஷாலினி தம்பதியினர் ஆவார்.

 

Related Articles

Next Story