நிஜத்திலும் அஜித் காதல் மன்னன்தான்பா!… லிஸ்ட்ல எத்தனை நடிகைங்க தெரியுமா?…

0
499

தமிழ் சினிமாவில் காதல் வலையில் சிக்காத நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு குறைவாகத்தான் இருக்கும் எண்ணிக்கை.  பெரும்பாலனவர்கள் ஏதேனும் ஒரு காதல் கிசுகிசுவிலாவது சிக்கி விடுகின்றனர்.

அந்த லிஸ்டில் அஜித்குமார் இருப்பதும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அவரே நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான். அதற்கு முன்னரே நடிகை ஹீரா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

ஆனால், அவரது ஆரம்ப கால காதல் கிசுகிசு சம்பவங்களை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அண்மையில் ஒரு வீடியோவில் தெரிவித்திருந்தார்.

அதாவது அஜித் முதலில் நடிகை சங்கவியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாராம். அதன்பிறகு அவர் விஜய் படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால், இந்த வதந்தி, வதந்தியாகவே மாறி போனது.

அதற்கு பின்னர் நடிகை ஹீரா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். ஒரு பேட்டியில் கூட ஆம் நான் ஹீராவை காதலிக்கிறேன் என்று கோபமாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். பிறகு அதுவும் பொய்யாகி போனது.

இதையும் படியுங்களேன் – விஜய் செஞ்ச காரியத்துல கடுப்பான சன் பிக்சர்ஸ்…. அதனாலதான் அது நடக்கலயாம்!….

அது பின்னர் நடிகை ஸ்வாதி உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அவரை பெண் கேட்பது வரை அஜித் சென்று உள்ளாராம். அவருடைய அம்மா மறுக்கவே அதுவும் தோல்வியில் முடிந்து போனதாம்.

அதற்கடுத்ததாக  லைலா கூட அஜீத்தை காதலில் சிக்க  வைக்க முயற்சித்துள்ளாராம். ஆனால், அஜித் அதற்கு வளைந்து கொடுக்க வில்லையாம். அதன்பின்னர்தான் ஷாலினியுடன் காதலாகி பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் அஜித் – ஷாலினி. இந்த தகவல்களை சினிமா பத்திரிகையாளரும்,  நடிகருமான பயில்வான் ரங்கநாதன் அண்மையில் ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருந்தார்.

google news