Ajith: குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி பட்டையை கிளப்பி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் விஜய் ரெஃபரன்ஸ்களும் இருப்பதால் விஜய் ரசிகர்களும் குட் பேட் அக்லி படத்தை செலிபிரேட் செய்து வருகிறார்கள். விஜய் சந்திக்கும் 2026 சட்ட மன்ற தேர்தலுக்கு அஜித் இந்தப் படத்தின் மூலம் தன் ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்ததை போல் சில காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
படம் ரிலீஸாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் அஜித் இருக்க ஆனால் அது எதையும் தன் தலைக்கு ஏற்றாமல் தன்னுடைய ரேஸில்தான் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவ்வப்போது ஆதிக், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இவர்களுடன் போனில் தொடர்பு கொண்டு படத்தின் அப்டேட் குறித்து கேட்டு வைத்துக் கொண்டார். ஆதிக்கும் சில அறிவுரைகளையும் வழங்கினார் அஜித்.
அக்டோபர் மாதம் வரை தன்னுடைய ரேஸில்தான் கவனம் செலுத்த இருக்கிறார். பல்வேறு நாடுகளில் நடக்கும் ரேஸில் தன் அணியுடன் கலந்து கொள்கிறார் அஜித். ஏற்கனவே துபாய் மற்றும் போர்ச்சுகலில் நடந்த ரேஸில் தன் அணி மூன்றாவது இடம் பிடித்தது. இது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்த நிலையில் அஜித் பெல்ஜியத்தில் இருக்கிறார்.
அங்கு நடக்கும் ரேஸிலும் கலந்து கொள்ள இருக்கிறார். பெல்ஜியத்தில் ரேஸ் டிராக்கில் நடக்கும் பயிற்சிகளை அஜித் யாரிடமோ வீடியோ காலில் காண்பிக்கும் ஒரு வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/SureshChandraa/status/1912377834959421925