Connect with us
ajith

Cinema News

சூர்யாவுக்கு பிடிக்காத விஷயம்! துணிந்து இறங்கிய அஜித் – சுதா கொங்கராவை ஆச்சரியப்படுத்திய ஏகே

சினிமாவில் நடிகர்கள் தான் நடிக்கும் படங்களின் மூலம் புதுபுது விஷயங்களை செய்து வருகின்றனர். எப்பொழுதும் போல் ஹீரோ என்றால் ஆக்‌ஷன், டூயட் என இல்லாமல் சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவரும் விதத்தில் அதற்கேற்றாற்போல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் பிம்பத்தையே மாற்றி அவனுக்குள்ளும் ஒரு வில்லன் இருக்கிறார் என்பதை படத்தின் மூலம் கொண்டு வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அதுவரை காதல் மன்னன், சார்மிங் ஹீரோ என்று புகழ்ந்து பேசிய அஜித்தை ஒரு பக்கா வில்லனாக காட்டியிருப்பார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க : மகனை களம் இறக்கி விஜயின் கோபத்திற்கு ஆளான லைக்கா!.. அட இது அவருக்கே தெரியாதாம்!…

அஜித்தின் 50 வது படமான மங்காத்தாவில் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைத்திருப்பார் வெங்கட் பிரபு. ஒரு சமயம் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா கூட ஒரு பேட்டியில் மங்காத்தா படம் பற்றி கூறியிருந்தார்.

அதாவது மங்காத்தா படம் பார்த்து வெங்கட் பிரபுவுக்கு இரண்டு பக்க அளவில் குறுஞ்செய்திகளை அனுப்பினாராம். இது எப்படி உன்னால் செய்ய முடிந்தது என்றும் அதுவும் ஒரு பக்கா சூப்பர் ஸ்டாரான அஜித்தை வைத்து எப்படி இதை நடத்திக் காட்டினாய் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாராம்.

ஏனெனில் படத்தில் ஹீரோயிசத்தை மட்டும் காட்டி நடிக்கும் நடிகர்கள்  மத்தியில் அஜித் இதை எவ்வாறு செய்தார்? எப்படி இதை வெங்கட் பிரபு சாத்தியப்படுத்தினார்? என்ற கேள்வி சுதா கொங்கரா மனதில் இருந்ததாம்.

இதையும் படிங்க : தாத்தா வழியில் பேரன்… ஜேசன் எண்ட்ரிக்கு எஸ்.ஏ.சி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? பாசம் தான்!

அதன் பின் அதற்கு ஒரு சின்ன உதாரணத்தையும் கூறினார். சூரறை போற்று படத்தில் கோபத்தில் சில கெட்ட வார்த்தைகளை சூர்யா பேச வேண்டுமாம். ஆனால் சூர்யாவுக்கு கெட்ட வார்த்தைகளே பிடிக்காதாம். படப்பிடிப்பில் பேச தயங்கினாராம்.

ஆனால் டப்பிங் வரும் போது தொடர்ந்து 10 கெட்ட வார்த்தைகளை போட்டு திட்டுவது போல பேசிக் கொண்டிருந்தாராம். அப்பொழுது சுதா கொங்கரா சூர்யாவிடம் ‘யோவ் உங்க அப்பா பார்த்தா திட்டுவாருய்யா, நீ வாட்ல கெட்ட வார்த்தைகளை அடிக்கி கிட்டு இருக்க’ என்று கூறினாராம்.

மேலும் ஹீரோ என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை முதன் முதலில் பிரேக் செய்தவர் வெங்கட் பிரபு என்றும் யாரும் அந்தளவுக்கு உத்தமனாக இருக்க முடியாது என்றும் ஒவ்வொரு நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் இருக்கிறான் என்றும் சுதா கொங்கரா கூறினார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top