எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிக்கு இல்லாத ஒரு பெருமை!.. ‘அமராவதி’ ரீ ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்!..

by Rohini |   ( Updated:2023-04-30 07:55:41  )
ajith
X

ajith

நாளை மே 1 தினத்தன்று அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ படம் முற்றிலும் டிஜிட்டல் மையமாக்கப்பட்டு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு உண்டான வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. படத்தை செல்வா இயக்கினார்.

1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தான் அஜித் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். படத்திற்கு இசை பால பாரதி. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாகி அப்பவே பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அஜித்தின் பிறந்த நாளான நாளை இந்தப் படத்தின் மறு ஒளிபரப்பு டிஜிட்டல் முறையில் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படுகின்றது, ஏற்கெனவே எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜியின் கர்ணன், ரஜினியின் பாபா ஆகிய படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து வெளியிட்டார்கள்.

இதை பற்றி ஒரு பேட்டியில் பேசிய அமராவதி படத்தின் இசையமைப்பாளர் பால பாரதி ‘எம்ஜிஆர் ,சிவாஜி, ரஜினி ஆகியோரின் படங்கள் இதே முறையில் வெளியிட்டிருந்தாலும் அஜித்தின் அமராவதி படத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது’ என்று கூறினார்.

அதாவது எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி ஆகியோரின் படங்கள் அவர்களின் கெரியரில் முக்கியமாக அதுவும் நடுவில் ரிலீஸான படங்களை தான் டிஜிட்டல் மையப்படுத்தி வெளியிட்டாரகள். ஆனால் அஜித்திற்கு முதன் முதலில் அவரது முதல் படத்தையே மறு ஒளிப்பரப்பு செய்கிறார்கள் என்று கூறினார். மேலும் அஜித்தை பற்றியும் மிகவும் பெருமையாக பேசினார் பால பாரதி.

இதையும் படிங்க : நம்பியாருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்பரைஸ்!.. அட அது சூப்பர் ஹிட் படமாச்சே!…

அந்தப் படத்தின் ரீ ரிக்கார்டிங் சமயத்தில் அஜித் அவர் கூடவே உட்கார்ந்து நான் நல்லா நடிச்சிருக்கேனா? எப்படி இருக்கு? என்று கேட்டுக் கொண்டே இருப்பாராம். மிகவும் பண்பாளர் என்றும் யாரைப் பற்றியும் குறை கூறாதவர் என்றும் பேசினார் பாலபாரதி.

Next Story