யாரையும் பாக்காமல் தனிமையை விரும்பிய அஜித்...! ஒருவரும் வராததால் எடுத்த பயங்கர முடிவு...
இன்று தனக்கென ரசிகர் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி சும்மா சிம்மாசனத்தில் ஒய்யாரமாக உட்காந்து எதுவுமே நடக்காததைப் போல் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவரின் வளர்ச்சியை கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்த்தால் ஏராளமான மேடு பள்ளங்களையும் தாண்டி தான் பாத்தாகனும்.
அந்த அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து இந்த உச்சத்தை அடைந்துள்ளார். ஆரம்பகாலங்களில் இவர் பேசுன பேச்சுக்கு எக்குத் தப்பான விமர்சனங்களை சந்தித்தவர்.ஆனால் இன்று அவர் பேசமாட்டாரா என ஆதங்கத்துடன் பார்க்க வைத்துள்ளார். முதலில் விழா, பிரஸ் மீட் எல்லாம் வந்து கொண்டிருந்தவர் இப்பெல்லாம் அதை முற்றிலும் தவிர்த்து வருகிறார். காரணம் தெரிய நிரூபர் அந்தனனை பேட்டி கண்டபோது பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
ஒரு அரசியல் விழாவில் கலைஞர் முன்னிலையில் நாங்கள் எங்கள் வேலைகளையெல்லாம் விட்டு இந்த விழாவிற்கு வர வேண்டியிருக்கிறது. ரொம்ப மிரட்டி கூப்பிடுறாங்க வரலைன்னா வேற கட்சி ஆளானு கேட்காங்க என தைரியமாக அந்த மேடையில் எல்லாருக்காகவும் தான் பேசினார். அதற்கு ரஜினியும் எழும்பி கைத்தட்டினார். இந்த பேச்சுதான் அவர்க்கு ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கி தந்தது. கலைஞர் முன் இவ்ளோ தைரியமாக பேசுனது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தது.
ஆனால் என்ன நடந்ததோ மறு நாள் ரஜினி அஜித்தை அழைத்து கலைஞரிடம் சென்று சமரசம் செய்து வைத்தார் என்பது நாம் அறிந்தது.ஆனால் இந்த நிகழ்விற்கு பிறகு அஜித் இவ்ளோ பிரச்சினைகளை சந்திக்கிறேன் ஆனால் யாரும் நம்பக்கம் நமக்காக பேசவில்லையே என எண்ணி மிகுந்த மனவருத்ததில் மூன்று நாள்கள் ஒரு ரூம்மிலயே இருந்துள்ளாராம். சாப்பாடு எல்லாம் போய் விடுமாம். அதன்பின் தான் யோசித்தாராம் இனி யாரையும் பாக்ககூடாது, யாரைப்பற்றியும் யாருக்காகவும் பேசக்கூடாது என.