உலகையே பைக்கில் சுற்றியவரிடம் ஆலோசனை... அஜித்தின் அடுத்த திட்டம் இதுதானாம்!....

Ajith – cinereporters

Ajith - cinereporters
நடிகர் அஜித் நடிப்பதை தொழிலாக மட்டுமே கொண்டவர். பைக் ஓட்டுவது, பைக்கில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணிப்பது, கார் ரேஸில் கலந்து கொள்வது, துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது, ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானங்களை இயக்குவது போன்ற விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவர். வலிமை படப்பிடிப்பு நடைபெற்ற போது ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு பைக்கில் தனியாக வந்தவர் அஜித். இது தொடர்பான பல புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

ajith - cinereporters
சமீபத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தபோது படப்பிடிப்பு முடிந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டது. ஆனால், அஜித் அங்கேயே தங்கினார். ரஷ்யாவில் பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் செய்யும் குழுவை சந்தித்து அவர்களோ இணைந்து பைக் பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.

ajith - cinereporters
இந்நிலையில், 7 கண்டங்கள் மற்றும் 64 நாடுகளை பைக் மூலமாகவே சுற்றி வந்த பெண்ணான மாரல் யசர்லோவை டெல்லியில் சமீபத்தில் அஜித் சந்தித்து பேசியுள்ளார். யசர்லோவின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொண்ட அஜித், பைக் பயணத்தின் போது அவர் என்னென்ன சவால்களை சந்தித்தார்?, எப்படி பல நாட்கள் சமாளித்தார்?, பல நாடுகளை எப்படி திட்டமிட்டு அவர் சுற்றி வந்தார்? என பல தகவல்களை அவரிடம் அஜித் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

ajith - cinereporters
இதை வைத்து பார்க்கும் போது, யசர்லோவை போல் அஜித்தும் விரைவில் பைக்கில் உலகை சுற்றி வர திட்டமிட்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்காலத்தில் உலகையே பைக்கில் சுற்றிவர அவரிடம் ஆலோசனைகளை பெறவே அஜித் அவரை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

maral-yazarloo