தவறாக வழிநடத்தப்படுகிறாரா அஜித்? அடுத்தடுத்து கேள்விக்குறியாகும் இயக்குநர்களின் வாழ்க்கை..

நடிகர் அஜித்குமார், துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளதாக அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், இயக்குநர் மிகழ் திருமேனி இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
துணிவு திரைப்படம் வெளியாகி கிட்டத்ட்ட 7 மாதங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகும் கூட அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு சரி, வேறு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. அஜித் இடையில் சிறிது காலம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க- நயனை கெஞ்ச வச்ச பாவம்… லைகாவிடம் கெஞ்சுகிறாரா அஜித்… விடாமுயற்சி சர்ச்சை!
ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. எனவே இந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே, இதற்கு முன்னர், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போகிறார் என்று தகவல் வெளியானது.
அந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. விக்னேஷ் சிவன் இந்த தகவலை உறுதி செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், கதை பிடிக்கவில்லை என்று அஜித் மறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல மாதங்கள் ஆகியும் இதுவரை விக்னேஷ் சிவன் எந்த படததிலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார்.
இதனால், அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடுத்து மகிழ் திருமேனிக்கும் அதே நிலை வந்துவிடுமோ, இந்த படத்தையும் அஜித் மறுத்துவிடுவாரோ என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டியில் செய்யாறு பாலு பேசியுள்ளார்.
ஒரு படத்தை கடைசி நேரத்தில் வேண்டாம் என்று கூறினால், அந்த இயக்குநரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்பது அஜித்துக்கு நன்றாக தெரியும். அஜித் மிகவும் நல்ல மனிதர். அவரை யாரோ தவறாக வழிநடத்துகின்றனர்.
அதனால் தான் இப்படி செய்கிறார் என்று நினைக்கிறேன். ஏற்கனே விக்னேஷ் சிவனின் கதையை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். மகிழ்திருமேனி படத்திலாவது அவர் நடிக்க வேண்டும் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- அஜித்தின் மாஸ் படத்தை மிஸ் செய்த தளபதி… நானா? நீயா? போட்டி தொடங்கியது இப்படிதானா?