செம மாஸா காண்பிச்ச இயக்குனரை ஒதுக்கலாமா?!.. அஜித் செய்வது நியாயமா?!...
அஜித் அவர்கள் அவருடன் பணிபுரியும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை பிடித்துப் போய்விட்டால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பாராம். சொல்லப்போனால் சிவாவிற்கே மூன்று படங்கள் தொடர்ந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல் போனிகபூர்க்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுத்தார்.
இப்படி இருக்கையில் அஜித்தை முதன் முதலில் ஒரு மாஸ் ஹீரோவாக தீனா படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை அஜித் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்க்காக மிரட்டல் என்ற படத்தை தயாரித்தார்.
ஆனால் அஜித்திற்கு அது பிடிக்காமல் போக சூர்யா நடித்து கஜினியாக மாறி படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸின் வளர்ச்சி சொல்லுமளவிற்கு இருந்தது. விஜய்க்கு தொடர்ந்து இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஒரு மேடையில் கூட ஏ.ஆர்.முருகதாஸ் அஜித் ஓகே சொன்னால் இப்ப கூட நான் படம் பண்ண தயார் என கூறினார். ஆனால் அஜித்திற்கு இவரின் பேச்சு பிடிக்காதாம் பொதுவாக தயாரிப்பாளர்கள் தான் படத்தின் வசூல் பற்றி பேசுவார்கள் ஆனால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர் வேலையை பார்க்காமல் வசூலை மட்டும் பற்றி பேசிகொண்டே இருப்பாராம். அதுக்கு போய் அவரை அஜித் ஒதுக்குவதா?