ஷங்கரின் இந்தப் படங்களில் எல்லாம் அஜித் நடிக்க வேண்டியதா?.. மிஸ் பண்ணிட்டாரே தல!..
பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர் இயக்குனர் சங்கர். தமிழில் முன்னனி நடிகர்களாக இருக்கும் கமல், ரஜினி, விஜய், அர்ஜூன் போன்ற பல நடிகர்களுடன் பணியாற்றிய சங்கர் இதுவரைக்கும் அஜித்துடன் சேர்ந்து மட்டும் படம் பண்ணவே இல்லை. அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினையா? அல்லது அஜித் மறுத்து வந்தாரா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஏன் இதுவரைக்கும் அவர்கள் சேர வில்லை என்பதன் காரணத்தை கூறியிருக்கிறார்.
இப்படி ஒரு வாக்கு கொடுத்தாரா?
பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த திரைப்படம் ‘ஜீன்ஸ்’. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி என்றாலும் பிரசாந்தின் கெரியரையே மாற்றிய படமாக அமைந்தது. ஆனால் அந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் அஜித். அஜித்திடமும் கதையை சொன்ன சங்கர் அஜித்திற்கும் கதை பிடித்துப் போக கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் சங்கரை பொறுத்தவரைக்கும் அவர் படங்களில் நடிக்க முழு கால்ஷீட்டையும் அவர் படத்திற்காக கொடுத்தாக வேண்டும். அந்த விஷயத்தில் தான் அஜித் மிஸ் பண்ணிட்டாரு. அப்போது ஏற்கெனவே இரண்டு படங்களில் கமிட் ஆகியிருந்த அஜித்தை அந்தப் படங்களை எல்லாம் கேன்சல் செய்து விட்டு வாருங்கள் என்று சங்கர் சொன்னாராம். ஆனால் அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என சொன்னதன் பேரில் அஜித் இந்தப் படத்தில் இருந்து விலக நேர்ந்ததாம்.
செட் ஆகாதுனு தெரியும்ல
சரி அந்தப் படம் தான் அப்படி ஆகிப் போச்சு என்று ‘முதல்வன்’ படத்தின் கதையை அஜித்தை மனதில் வைத்தேதான் எழுதியிருந்தாராம். அதையும் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அஜித் இந்த மாதிரி அரசியல் சார்ந்த படங்கள், சமூகம் சார்ந்த படங்களில் நடிக்க இன்னும் எனக்கு தகுதி போதாது என்று சொல்லிவிட்டாராம்.
அடுத்ததாக சிவாஜி படத்தையும் அஜித்தை மனதில் வைத்து தான் எழுதியிருந்தாராம். அதுவும் நடக்க வில்லையாம். ஒரு கட்டத்தில் அஜித்திற்கே இப்படி ஆகிப்போச்சே? என சங்கரிடம் நாம சேர்ந்து பண்ணலாம் என்று சொன்னாராம். அப்போது சங்கரிடம் இருந்த கதை ‘எந்திரன்’. அந்தப் படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருந்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
பிரம்மாண்டம் பிடிக்காது ஆளு
இதையும் அஜித்திடம் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட அஜித் இத்தனை பிரம்மாண்டமான படத்தில் நடிக்க விருப்பம் இல்லை எனவும் ஒரு வேளை படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளர்கள் படும் அவஸ்தையை தன்னால் பார்க்க முடியாது எனவும் கூறினாராம்.
இதையும் படிங்க : பிரபல நடிகையின் இறுதிச் சடங்கு.. காசு இல்லாமல் தவித்த குடும்பம்!.. யாருக்கும் தெரியாமல் உதவி செய்த கேப்டன்..
அவ்ளோதான் அதிலிருந்து இன்று வரை அஜித்தும் சங்கரும் இணையவே இல்லை. ஒரு வேளை வாய்ப்பு இருந்தால் அஜித்தின் அடுத்தப் படமான ஏகே63 படத்தில் சங்கர் இணையலாம் என்று செய்யாறு பாலு கூறினார்.