
Cinema News
அஜித் தவறவிட்ட வேற லெவல் மெகா ஹிட் திரைப்படங்கள்… ஜஸ்ட் மிஸ்…
ஒரு ஹீரோ ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அத்திரைப்படத்தில் இருந்து விலகுவது என்பது தமிழ் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருவதுதான். சில ஹீரோக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒப்புக்கொள்ளும் திரைப்படத்தில் முதலில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள். ஆனால் தயாரிப்பாளருடனோ அல்லது இயக்குனருடனோ வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் வெளிவருவதும் உண்டு. இது தவிர அந்த ஹீரோக்களின் தனிப்பட்ட விஷயங்கள் கூட அதனை முடிவு செய்யும்.
சூர்யா, பாலாவின் “வணங்கான்” திரைப்படத்தில் இருந்து விலகினார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதே போல் அஜித்குமாரை எடுத்துக்கொண்டால் வஸந்த்தின் “நேருக்கு நேர்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்துகொண்டு அத்திரைப்படத்தில் இருந்து விலகினார்.

Ajith Kumar
மேலும் அஜித் இரண்டு மாபெரும் ஹிட் திரைப்படங்களில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு சில காரணங்களால் அத்திரைப்படங்களில் அவரால் நடிக்க முடியவில்லையாம். அவ்வாறு அவர் தவறவிட்ட இரண்டு மெகா ஹிட் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1.நியூ

New
கடந்த 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நியூ”. இத்திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கியிருந்தார். மிகவும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் முதலில் அஜித்தான் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அஜித் இத்திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.
2.கஜினி

Ghajini
கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கஜினி”. இத்திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ், “தீனா” திரைப்படத்தை இயக்கி வந்தபோதே அஜித்திடம் “கஜினி” திரைப்படத்தின் கதையை கூறியுள்ளார். மேலும் அஜித் அத்திரைப்படத்தில் நடிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். ஆனால் சில காரணங்களால் அத்திரைப்படத்தில் அஜித் நடிக்க முடியவில்லை.

Ajith Kumar
தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் அஜித் நடித்திருந்தால் மிக சிறப்பாகவே இருந்துருக்கும்.
இதையும் படிங்க: கம்மி பட்ஜெட் படத்துக்கு இவ்வளவு கோடி கடனா? இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட அருண் விஜய்…