தல தட்டிவிட்ட படங்கள்.. பட் அவர் நடிச்சிருந்தா மாஸ் தான்...
”ஒவ்வொரு அரிசியிலும் ஒருவர் பெயர் எழுதி இருக்கும். கிடைக்காதது நமக்கானது இல்லை. அதை நினைத்து நான் வருத்தப்படுவது இல்லை.” அஜித்திடம் எப்போதுமே அவர் மிஸ் செய்த மற்றும் நிராகரித்த படங்கள் குறித்து கேள்வி எழும்போது இதை தான் கூறுவார். தல என தனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கும் அஜித் சினிமாவில் மிஸ் செய்த மிக முக்கிய படங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?
நேருக்கு நேர்:
வசந்த் இயக்கத்தில் உருவான படம் நேருக்கு நேர். முதல் படத்தின் மூலம் வெற்றியை ருசித்து இருந்த அஜித்தையும், வளர்ந்து வந்த விஜயையும் வைத்து டபுள் ஹீரோ கதையை உருவாக்கி இருந்தார் வசந்த். ஆனால், அப்போது அஜித்திற்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட மனகசப்பால் அஜித் அந்த படத்தில் இருந்து விலகினார். அதில் அஜித் நடித்திருந்தால், தல தளபதி ரசிகர்களின் ட்ரேட் மார்க் படமாக அமைந்து இருக்கும்.
ஜெமினி:
சரணின் இயக்கத்தில் உருவாகிய காதல் மன்னன் மற்றும் அமர்க்களம் படம் அஜித்தின் வெற்றி பட வரிசையில் இருந்தது. அதை தொடர்ந்து, ஜெமினி படத்திலும் அஜித்தை நடிக்க வைக்கவே சரண் விரும்பினார். அதே நேரத்தில், அஜித்திடம் சிங்கம்புலி ரெட் படத்தின் கதையை கூறி இருக்கிறார். ஜெமினி கதையுடன் ஒப்பிடும் போது ரெட் மாஸ் கதையாக தோன்றியதால் அஜித் ஜெமினிக்கு நோ சொல்லிவிட்டாராம். ஆனால், கணக்கு தவறாக ரெட் படம் தோல்வியை தழுவியது.
நியூ:
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ஹிட் அடித்த படம் நியூ. ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். அவருக்கு ஜோடியாக ஜோதிகா ஒப்பந்தமாகி படப்பிடிப்புக்கு படக்குழுவும் தயாராகி இருந்தனர். ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது. பின்னர் படமே கைவிடப்பட்டது. அக்கதையை தான் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இயக்கி இருந்தார். ஜோதிகாவிற்கு பதிலாக சிம்ரன் நடித்தார்.
இதையும் படிங்க: விஜயின் மெகா ஹிட் படத்தை ‘ஜஸ்ட் மிஸ்’ தவறவிட்ட அஜித்… 18 வருட ரகசிய தகவல் இதோ…
மிரட்டல்:
முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருந்த படம் மிரட்டல். இப்படத்தில் அஜித் நடிக்க இருந்து அதற்கான போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. ஆனால், கதை குறித்து முருகதாஸ் மற்றும் அஜித்திற்கு இடையே கருத்து வேறுபாடு உருவாகியதாம். அதனால் அஜித் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. பின்னர், மிரட்டல் என்ற படம் தான் கஜினியாக வெளியாகி மாஸ் ஹிட் அடித்தது.
நான் கடவுள்:
பாலாவின் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த நான் கடவுள் படம். இப்படத்திற்காக அஜித் மெலிந்த தேகம், நீண்ட முடியெல்லாம் வளர்த்து கொண்டு தயாராக இருந்தார். ஆனால், பாலா படத்தின் படப்பிடிப்பை துவக்குவதாக தெரியவில்லை. இருந்தும், அதே கெட்டப்புடன் பரமசிவன், திருப்பதி என இரு படங்களில் நடித்து விட்டார். ஆனால் நான் கடவுள் படம் துவங்கவில்லை. இதில் கடுப்பான அஜித் படத்தில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து அஜித் மற்றும் பாலாவிற்கு பெரும் பிரச்சனைகள் எழுந்தது. அப்போதைய நேரத்தில் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.