கைவிட்ட விஜய்,சூர்யா...கை கொடுத்த அஜித்....அதனால் கிடைத்த மாபெரும் வெற்றி...
நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கிய காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அவரை முன்னுக்கு கொண்டு சென்று சேர்த்த படம். இந்த படங்களுக்கு அப்புறம் தான் சூர்யா ஆக்ஷன் ஹீரோவாகவும், ஒரு காதல் மன்னனாகவும் அறியப்பட்டார்.
அடுத்தும் இவரை வைத்து ஒரு சூப்பர் ஆக்ஷன் படம் பண்ணலாம் என சூர்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க மேனன் அவர்கள் ஸ்கிரிப்ட் எழுதி தயாராகி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் தான் சூர்யா ஒரு கடிதம் எழுதி அதில் மன்னிக்கவும் உங்கள் படத்தில் என்னால் நடிக்க முடியாது என குறிப்பிட்டு மேனனிடம் அனுப்பினார். அந்த நேரத்தில் சூர்யா லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
படம் என்னமோ படுமோசமாக எடுக்கப்பட்டு தோல்வியை அடைந்தது. மேனன் அடுத்து விஜய்யை வைத்து பத்து நாள்கள் மட்டும் சூட் எடுத்து அதுவும் அப்படியே கைவிடப்பட்டது. அதன்பின் அவர் எடுத்த படங்களான நடுனிசை நாய்கள், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் படு தோல்வியடைய கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இயக்க்குனராக கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தார்.
இதையறிந்து அஜித் அவர்கள் அவரை கூப்பிட்டு படம் பண்ணலாம்னு சொல்லி என்னை அறிந்தால் படம் எடுக்கப்பட்டது.அது அஜித் கெரியரில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. மேனனுக்கும் எக்கச்சக்கமான நல்ல பேரை வாங்கிக் கொடுத்தது. இதே மேனன் தான் ஒரு கல்லூரி விழாவில் ஒரு மாணவன் தல யை வைத்து படம் பண்ணுவீங்களானு கேட்க, தலனா யாரு என்று கேட்டவர். அந்த தல தான் இப்ப அவருக்கு திரும்பவும் வாழ்க்கையைக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.