பக்கபலமாக நின்ற நடிகர்!.. கையெடுத்து கும்பிட்ட தல.. மயானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..
இன்று காலை தமிழ் சினிமாவிற்கே ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அனைவரையும் வாட்டியது. முன்னனி நடிகரான அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று காலை காலமானார். அந்த செய்தி கேட்டு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.
உதய நிதி ஸ்டாலின் தான் முதல் ஆளாக நின்று அஜித்தை நேரில் சந்தித்து தனது இரங்கலை தெரிவித்து வந்தார். அதன் பின் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரும் அஜித்தை நேரில் சந்தித்து பேசினார். அதன் பின் அஜித்தின் மேனேஜரிடம் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அது அஜித் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில் தந்தையின் மரணத்தை குடும்ப நிகழ்வாக நடத்த இருக்கிறோம், அதற்கு உங்களின் ஆதரவும் வேண்டும் என யாரும் வரவேண்டாம் என்பதை மறைமுகமாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இல்லையென்றால் இன்று அஜித் ரசிகர்கள் ஒன்று கூடி தமிழ் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்திருப்பார்கள். அதன் காரணமாகவே அஜித் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
மேலும் திரையுலகை சார்ந்த சில பிரபலங்களும் தங்களது இரங்கலை நேரில் போய் தெரிவித்தனர். பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குனர் ஏ.எல்.விஜய், மகிழ் திருமேனி போன்றோரும் அஜித் வீட்டிற்கே வந்தனர். இறுதிச் சடங்கை முடித்து விட்டு அஜித் வீடு திரும்பும் போது நடிகர் விஜய் மாலையில் அஜித்தை போய் சந்தித்து ஆறுதலை கூறினார்.
இந்த நிலையில் காலை தந்தையின் மரணச்செய்தி கேட்டதில் இருந்து மயானம் வரை அடக்கம் செய்கிற வரைக்கும் அஜித்திற்கு பக்க பலமாக இருந்து அனைத்தையும் முடித்துக் கொடுத்தவர் பிரபல ஸ்டண்ட் நடிகர் ‘பெசண்ட்’ ரவி. எல்லா சடங்கையும் முடித்து விட்டு அஜித்தை காரில் ஏற்றி அனுப்பிய வரை பெசண்ட் ரவி தான் கூடவே இருந்தார்.
அஜித் காருக்குள் ஏறும் போது கூட கார் கதவை திறந்து அஜித் அமர்ந்த பிறகு ‘சார் வீட்டுக்கு போயிருவீங்கள சார்’ என்று மிகவும் அன்போடும் அக்கறையோடும் கேட்டு வழியனுப்பி வைத்தார் ரவி. அஜித் போகும் போது ரவியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு சென்றார்.