ajith
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கு எந்தளவுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதோ ,
அதற்கு நேர்மாறாக முழுமூச்சுடன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்ட மிட்டிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு பிறகு அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் மறைவுக்கு வராத வடிவேலு!.. மன்சூர் அலி கான் நச்சுன்னு சொன்ன அந்த வார்த்தை.. என்ன தெரியுமா?
அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படியும் இளசுகளை கவரும் படமாகத்தான் ஆதிக் அஜித் படம் இருக்கும் என்றும் நம்பிக்கை வைத்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்திலும் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அது வெற்றிமாறன் விடுதலை படத்தை முடித்த பிறகு எடுப்பாரா? இல்லை வாடிவாசல் முடித்த பிறகு எடுப்பாரா? என்று தெரியவில்லை.
இதையும் படிங்க: தைரியமா வெளியே வந்து மக்களுக்கு நல்லது பண்ணும் விஜய்!.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. பிரபலம் ட்வீட்!
அதற்குள் அஜித் மறுபடியும் ஒரு பைக் சுற்றுலா பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே 13 நாள்கள் சுற்றுலா பயணம் செய்து வந்த அஜித் அடுத்தடுத்து பட பிரச்சினைகளால் அதை தொடரமுடியவில்லை.
விடாமுயற்சி படத்திற்கு பிறகு ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தரர். இப்படி சுற்றுலா பைக் பயணம் மேற்கொள்வதற்கு ஒரே காரணம் ஒரு வேளை கின்னஸில் அவர் சாதனை படைக்க கூட இருக்கலாம் என்று ஒரு பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: என்னடா ஜோடி மாத்தி வெளியே அனுப்புறீங்க!.. இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்.. பரிதாப நிலையில் பிக் பாஸ்!
எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய அஜித் அடுத்ததாக அவருடைய ஒரே குறிக்கோள் கின்னஸ் சாதனையாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…