அஜித்தோட அந்த படம் நடிச்சப்ப நான் 9ஆவது படிச்சிட்டு இருந்தேன்! – நடிகை சொன்ன ஷாக் தகவல்!..

அஜித்தோட அந்த படம் நடிச்சப்ப நான் 9ஆவது படிச்சிட்டு இருந்தேன்! – நடிகை சொன்ன ஷாக் தகவல்!..

தமிழில் மாஸ் ஹிட் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் அஜித். பல வருடங்களாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாமல் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் அஜித். அஜித் நடித்த படங்களில் சிட்டிசன், தீனா, வில்லன் போன்ற திரைப்படங்கள் மிகவும் முக்கியமானவை.

இவையே தமிழ் சினிமாவில் அஜித்தின் மார்க்கெட் அதிகமாக உயர காரணமாக அமைந்த திரைப்படங்கள். தற்சமயம் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் மகிழ் திருமேணி திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார் அஜித்.

நடிகை சொன்ன தகவல்:

அந்த படத்திற்கான திரைக்கதை வேலைகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் நாளை மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் முதன் முதலாக நடித்த அமராவதி திரைப்படத்தை மறு வெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி டால்பி சவுண்ட் டெக்னாலஜியில் வெளியிட உள்ளனர்.

தல ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்போது பிரபலமாக இருந்த நடிகை சங்கவி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.அவருக்கும் அமராவதிதான் முதல் படம். அமராவதி திரைப்படத்தின் மறு வெளியீட்டை முன்னிட்டு இடையில் ஒரு வீடியோ வெளியிட்ட சங்கவி ஒரு ஆச்சர்ய தகவலை வெளியிட்டிருந்தார்.

அதாவது அமராவதி திரைப்படத்தில் நடிக்கும்போது அவர் 9 ஆம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தாராம். 16 வயதிலேயே நடிப்பதற்கு வந்துவிட்டார் சங்கவி. ஆனால் படத்தில் பார்ப்பதற்கு இவர் பெரிய பெண் போல இருப்பார். இதனால் தற்சமயம் அவர் கூறிய இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியமான விஷயமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: இப்ப உள்ள சினிமாக்காரங்க மோசம், பாடலாசிரியர்கள்தான் பாவம்… உண்மையை உடைத்த வாலி!..

 

Related Articles

Next Story