Connect with us

வலிமை எஃபெக்ட்.! அஜித்தை விடிய விடிய வச்சி செய்து வரும் வினோத்.! முழு விவரம் இதோ..,

Cinema News

வலிமை எஃபெக்ட்.! அஜித்தை விடிய விடிய வச்சி செய்து வரும் வினோத்.! முழு விவரம் இதோ..,

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் மிகவும் கோலாகலமாக வெளியானது. ஆனால் படம் கொடுத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் பெரிய வெற்றியை பெற தவறியது என்றே கூறலாம்.

மேலும் அதற்கு முன்னர் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த திரைப்படம் ஓர் ரிமேக் திரைப்படம் ஆகும். அதுமட்டுமல்ல, வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒன்லைன் என கூறப்படுகிறது.

மேற்கண்ட இந்த இரண்டு படங்களும் பெரிய வரவேற்பை பெற தவறியதால், அடுத்த படத்தை எப்படியும் ஹிட்டாக கொடுக்க வேண்டும் என இந்த முறை இயக்குனரை அஜித் எந்த தொந்தரவும் செய்யவில்லை, முழுக்க முழுக்க வினோத் படமாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – அதென்ன., வாயில் சொருகி வைச்சிருக்கார்.?! உங்களுக்கு இதெல்லாம் தேவைதானா சந்தானம்.?!

இந்த படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு திரையிட படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இதனால் நேரம் காலம் பார்க்காமல் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறாராம் இயக்குனர் வினோத். அஜித்தும் இரவு 2 மணி ஆனாலும் ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு தான் செல்கிறாராம். அந்தளவுக்கு தீவிரமாக இறங்கி வேலை செய்து வருகிறதாம் படக்குழு.

இதனை கேட்கையில், எப்படியும் படம் தரமாக இருக்கும் என படத்தின் தலைப்பு எப்போது வரும், பட ஷூட்டிங் எப்போது முடியும் படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top