இதனால் தான் மோகன் மார்கெட் போனது… அஜித்தின் லாஜிக்.. ஷாக் தகவல்

Published on: October 1, 2022
---Advertisement---

தமிழ் சினிமா மோகனை எப்போதுமே மைக் மோகன் எனச் செல்லமாக அழைப்பார்கள். ஒரு கட்டத்தில் ரஜினிக்கே டப் கொடுப்பார் எனப் பேசப்பட்டவர். அதை செய்யாமலே தனது இடத்தினை இழந்தார். ராசி, ஜாதகம் எல்லாம் தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்படுவது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நடிகை ராசி இல்லை,இந்த நாளில் படத்தினை வெளியிடக்கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகள் செய்வார்கள்.

Also Read

இந்த நம்பிக்கை நடிகர் அஜித்திற்கும் இருக்கிறதாம். அதாவது அவர் நடித்த படங்களினை வியாழக்கிழமையில் தான் வெளியிடுவார். ஏன்? அப்படத்தின் அத்தனை அறிவிப்புகளும் அன்று தான் வெளியாகும். ஆனால் இதையெல்லாம் விட ஒரு படத்தினை கூட மூட நம்பிக்கையால் அஜித் நோ சொல்லியதும் நடந்து இருக்கிறது.

இதையும் படிங்க: அட இது செம மாஸ்!..அதே மூணு எழுத்து செண்டிமெண்ட்!..அஜித் 61 பட தலைப்பு இதுதானாம்…

ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான படம் நீ வருவாய் என. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம். இப்படத்தில் முதலில் விஜய் நடிக்க வைக்க படக்குழு போராடியது. ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத சூழலில், அஜித்திடம் கேட்டிருக்கிறார் ராஜகுமாரன். ஆனால் அவரோ இல்லை என்னால் முடியாது எனக் கூறிவிட்டாராம்.

அதற்கு காரணம் கேட்டப்போது, ஒரு படத்தில் நாயகி கடைசி வரை நாயகனை வேண்டாம் எனக் கூறினால், அவரின் திரை வாழ்வே முடிந்து விடுமாம். இதுப்போல தான் மைக் மோகன் சினிமா வாழ்க்கையும் போனது. அதாவது, மௌனராகம் படத்தில் ரேவதி அவரை வேண்டாம் எனத் தொடர்ந்து கூறியதாலே பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என அஜித் கூறினாராம். இதனை ராஜகுமாரன் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.