‘அஜித் ரசிகர் மன்றம்’ பெயரில் பல லட்ச ரூபாய் மோசடி!.. தல ஒதுங்கியிருந்தாலும் விட மாட்டாங்க போல...

by Rohini |
ajith_main_cine
X

ajith

அஜித் ரசிகர் மன்றம் என்ற பெயரில் தம்பதியிடம் பண மோசடி செய்த சிவா என்பவரை போலீஸ் தேடி வருவதாக தகவல் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அடுத்த கட்டப்புளியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதி தான் ஏமாந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாளையூத்தி பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அஜித் ரசிகர் மன்றம் சார்பாக நடிகர் அஜித் த்ன்னுடைய ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக பிரித்து நலிந்த மக்களுக்கு வீடுகட்டி தருகிறார் என்று சொல்லி அஜித் ரசிகரான தன் மனைவிக்காக ஐயப்பன் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்துள்ளார்.

ajith1_cine

ajith

முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அதன் பின் வீடு கட்டுவதற்கான 15 லட்சம் மற்றும் பத்திரவு பதிவு தொகை ஒரு லட்சம் ஆக 16 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என 20 ரூபாய் போலி பத்திரவு ஆவணங்களில் ஐயப்பனிடம் இருந்து கையெழுத்து வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்திருக்கின்றார்.

மேலும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தனக்கு நன்றாக தெரியும் எனவும் சுரேஷ் சந்திரனிடம் உதவியாளராக இருக்கும் ஒருவரின் போலி ஆவணங்களை தயார் செய்து அதன் மூலம் இந்த வேலையை பார்த்திருக்கின்றார் சிவா. தாம் ஏமாற்றுப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த அந்த தம்பதியினர் சிவாவிடம் கேட்க வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : மார்க்கெட்டை காப்பாத்தனும்ன்னா ஜீவா இதை பண்ணியே ஆகனும்!! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த முக்கிய டிப்ஸ்…

இதனால் அந்த தம்பதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ரசிகர் மன்றமே வேண்டாம் என கலைத்த அஜித் சும்மா இருந்தாலும் விட மாட்டாங்க போல என்பதற்கு இந்த செய்தி ஒரு நல்ல உதாரணமாகும்.

Next Story