அஜித் ரெம்ப பயப்படுவார்.! இவர் பேசுறத கேட்டா ரசிகர்கள் கோச்சிக்க போறாங்க.!

by Manikandan |
அஜித் ரெம்ப பயப்படுவார்.! இவர் பேசுறத கேட்டா ரசிகர்கள் கோச்சிக்க போறாங்க.!
X

தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான மனிதர் என்றால் அது தற்போதைக்கு அஜித் என பலரும் கூறுவார்கள். தனக்கு மனதில் தோன்றியதை அவரே தைரியமாக பேசிவிடுவார். அதற்கு சிறிய எடுத்துக்காட்டு தான், அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் முன்னிலையிலேயே தைரியமாக பேசியவர்.

தன் மனதில் பட்டத்தை பேசுவதால் தான் சில நேரம் அவர் சிக்கலில் மாட்டி கொள்வர். அதனாலேயே பொது உலகில் இருந்து விலகி, தற்போது முற்றிலும் விலகிவிட்டார். அவரை போய் ஒரு இயக்குனர் அஜித் ரெம்பா பயப்படுவார் என கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல கே.எஸ்.ரவிக்குமார் தான்.

அவர் தான் அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என இரு சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.அதில் வரலாறு திரைப்படம் ஷூட்டிங்கின் போது தான் அஜித் நிறைய பயந்தாராம். ஆம், அதில் ஒரு கதாபாத்திரம் பெண்களுடன் பரதநாட்டியம் ஆடுவதால், பெண்மை உணர்வு கொண்டவர்கள் போல நடந்துகொள்வார்.

இதையும் படியுங்களேன் - ஐஸ் வைத்த விஜய்.! காத்திருப்பதாக கூறிய SAC.! பின்னனி இதுதான்.!

அந்த கதாபாத்திரம் நடிக்க தான் அஜித் மிகவும் பயந்தாராம். ஆம் அதில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என அவ்வப்போது இயக்குனர் ரவிகுமாரிடம் கேட்டு கொண்டே இருப்பாராம்.அவருக்கு ரவிகுமார் அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என தைரியமூட்டி வருவாராம். அதன் பின்னர் அந்த திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், அஜித்திற்கு விருதுகளையும் வாங்கி கொடுத்தது.

Next Story