More
Categories: Cinema News latest news

விடாமுயற்சி ப்ரேக்கில் அஜித் செய்யும் வேலை… கடைசியில் ‘வாவ்’ சொல்லும் பிரபலங்கள்..!

Vidamuyarchi: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தில் நடக்கும் சில சுவாரஸ்ய தகவலும் சுடசுட அப்டேட் தகவலாக இணையத்தில் தொடர்ந்து கசிந்து வரும் நிலையில் தற்போது ஒரு நியூஸ் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் அறிவித்து கொஞ்சம் கேப், அடுத்து விடாமுயற்சி பெயர் ரிலீஸ் ஆகி பெரிய கேப் என படம் தொடங்குமா என்ற சந்தேகத்தில் இருந்தனர் அஜித் ரசிகர்கள்.

Advertising
Advertising

இதையும் படிங்க: கே.ஆர்.விஜயா தயாரித்த படத்தில் ரஜினிகாந்தை சிபாரிசு செய்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?

ஒரு கட்டத்தில் தன்னுடைய பைக் ட்ரிப்பை முடித்துக்கொண்ட அஜித் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் முதல் வில்லனாக அர்ஜூன் நடித்து வருகிறார். மங்காத்தாவுக்கு பின்னர் இருவரும் இணைந்துள்ளனர்.

த்ரிஷா ஒரு முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். ஆரவ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. த்ரிஷாவுக்கு முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து ஒரு மலையாள படத்தில் இணைய இருக்கிறாராம். இந்நிலையில் அஜித் விடாமுயற்சி ப்ரேக்கில் ஒரு வேலை செய்வாராம்.

இதையும் படிங்க: பலே ஆளுதான்! படம் முழுக்க டூப் போட்டு ஏமாத்திய கமல் – ஆதங்கத்தை வெளிப்படுத்திய அந்த டூப் நடிகர் யார் தெரியுமா?

சமீபத்தில் கூட அர்ஜூன் தன்னுடய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தினை யார் எடுத்து இருப்பார் என கமெண்ட்டுடன் பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் கொஞ்சமும் அசராமல் அஜித் என்றனர். அஜித்துக்கு கார் ரேஸுக்கு அடுத்து துப்பாக்கி சுடுதல், புகைப்படம் எடுப்பது பிடித்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts