அஜித்தின் புதிய படம் ஸ்டார்ட்...படப்பிடிப்பு எப்போது தெரியுமா?...

by சிவா |   ( Updated:2022-01-07 06:07:28  )
அஜித்தின் புதிய படம் ஸ்டார்ட்...படப்பிடிப்பு எப்போது தெரியுமா?...
X

போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி சென்றுள்ளது.

ஏற்கனவே, இந்த படம் 2 வருடங்களாக தயாரிப்பில் இருந்த வலிமை படத்தால் அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூருக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அதாவது எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானது.

இதைத்தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நாம் இணைவோம் என அஜித் வாக்குறுதி கொடுத்தார். குறைந்த நாட்களில் குறைந்த பட்ஜெட்டில் அப்படம் உருவாகவுள்ளது. அப்படத்தையும் ஹெச். வினோத்தே இயக்கவுள்ளார். தற்போது வலிமை பட ரிலீஸ் தள்ளி போயுள்ள நிலையிலும், அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது.

இந்நிலையில், வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனாலும், கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

Next Story