தமிழ் ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துவருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில் நாயகியாக நடித்த ஹீமா குரோஷி நடிக்கிறார்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இதன் படப்பிடிப்பு இம்மாதத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் ஆரம்பித்து ஒரு ஆண்டுக்கும் மேலாக இப்படத்தின் அப்டேட் ஏதும் வராமல் இருந்தது. அதன்பின் கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. அஜித் தனக்கு ஒரு இயக்குனர் பிடித்துவிட்டால் தொடர்ந்து அந்த இயக்குனர்களுடன் பணியாற்றுவார்.
அப்படித்தான் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு படங்களில் இயக்குனர் சிவாவுடன் பணியாற்றினார். இதேபோல்தான் தற்போது இயக்குனர் ஹெச். வினோத்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்த படமும் இவருடன்தான் என அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
இதையடுத்து அஜித் தனது 62வது படத்தில் யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தற்போது அஜித் 62வது படத்தில் இயக்குனர் தியாகராஜான் குமாரராஜாவுடன் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான ஆரண்யகாண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் தேசிய விருதை பெற்றது.
தல அஜித் தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகவே இந்த தகவலை வெளியே தெரிவிக்கவில்லையாம். வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…