லியோ ரிலீஸ் அன்னைக்கே அஜித் செய்யப்போகும் சம்பவம்!. உங்க சண்டைய நிறுத்துங்கப்பா சாமி!..

by சிவா |   ( Updated:2023-10-12 08:00:23  )
vijiay ajith
X

Ajithkumar 63: திரையுலகில் அஜித் - விஜய் இடையே நேரிடையான மற்றும் மறைமுக மோதல் என்பது பல வருடங்களாகவே இருந்து வருகிறது. ரஜினி - கமல் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தும் கூட இந்த அளவுக்கு சண்டை போட்டுக்கொண்டது கிடையாது. கமல் படத்தை பார்த்தால் உடனே அவருக்கு போன் செய்து பாராட்டுவதை பழக்கமாக கொண்டிருந்தவர் ரஜினி. அந்த நாகரீகமான நட்பு என்பதெல்லாம் இப்போதுள்ள நடிகர்களிடம் கிடையாது.

விஜய் தனது சினிமா போட்டியாக அஜித்தை பார்ப்பதும், அஜித் தனக்கு போட்டியாக விஜயை நினைப்பதும் பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதேபோல், தங்களின் படங்களில் வசனங்களிலும், பாடல் வரிகளிலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதும் இதற்கு முன் பலமுறை நடந்துள்ளது.

இதையும் படிங்க: அவங்களால முடிஞ்சிது உங்களால ஏன் முடியல? சன் பிக்சர்ஸை வறுத்தெடுத்த ரஜினிகாந்த்..!

இருவருமே துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து மெல்ல மெல்ல ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கி மாஸ் ஹீரோவாக மாறியவர்கள்தான். அஜித் சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர். விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் உதவியால் நடிகராக மாறியவர். அவ்வளவுதான் வித்தியாசம். மத்தபடி இருவரும் சினிமாவில் பயணித்த ரூட் ஒன்றுதான்.

அதேநேரம், வியாபாரத்திலும், சம்பளத்திலும், அதிக ரசிகர்களை வைத்திருப்பதிலும் விஜய் அஜித்தை விட ஒருபடி முன்னே இருக்கிறார். இது அஜித்துக்கும் தெரியும். பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும்போது அஜித் படம் ரிலீஸ் ஆகாது. ஆனால், விஜயின் ‘வாரிசு’ படம் வெளியான போது துணிந்து தனது ‘துணிவு’ படத்தை வெளியிட்டு கெத்து காட்டினார் அஜித்.

இதையும் படிங்க: ‘லால்சலாம்’ படத்தில் வேதனையை கொட்டித்தீர்த்த ரஜினி! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் பாருங்க

எட்டு மாதத்திற்கு பின்னர் விடாமுயற்சி படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த கேப்பில் விஜய் லியோ படத்தில் நடித்தே முடித்துவிட்டார். அதேபோல், விடாமுயற்சி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். மார்க் ஆண்டனி ஹிட்டுக்குபின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் இது. இது அஜித்தின் 63வது திரைப்படமாகும்.

இந்நிலையில், லியோ வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி அன்றே இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட சொல்லியிருக்கிறாராம் அஜித். லியோ படம் வெளியானால் டிவிட்டர், முகநூல் என அனைத்திலும் அப்படம் பற்றித்தான் ரசிகர்கள் பேசுவார்கள். அதை திசை திருப்பவே அஜித் இதை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்துங்கப்பா!...

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்: கோடிகளை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!. தமிழில் கெத்து காட்டிய 2.0…

Next Story