அடேங்கப்பா அடுத்த படத்துக்கான சம்பளம் இவ்வளவா? அஜித்தை வளைத்து போட பக்கா ஸ்கெட்ச்

by Rohini |   ( Updated:2025-04-15 05:25:50  )
ajith_new
X

ajith_new

Ajith:ஒரு பக்கம் தன்னுடைய பாடலை தன் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக குட் பேட் அக்லி பட தயாரிப்பாளருக்கு 5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா. இன்னொரு பக்கம் குட் பேட் அக்லி படத்தின் வெற்றி அஜித்தின் மார்கெட்டையே பெரிய அளவில் உயர்த்தியிருக்கிறது. குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 165 கோடி என்று சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 60 கோடி அதிகமாக கொடுத்துதான் இந்தப் படத்தில் அஜித்தை கமிட் செய்திருக்கிறார்கள் மைத்ரி மூவி மேக்கர்ஸ். இந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றாலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு டேபிஸ் லாஸ் என்றுதான் சொல்கிறார்கள். இருந்தாலும் படம் பரபரப்பாக பேசப்பட வசூலும் எகிறிக் கொண்டே இருப்பதால் மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் பண்ணால் அதுவே அடுத்தபடத்திற்கான பெரிய பிஸினஸாக இருக்கும் என நினைத்து அஜித்தை வைத்து அடுத்த படத்தை எடுக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அடுத்தப்படத்திற்கு அஜித்துக்கு 175 கோடி சம்பளம் தரப்போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ஏற்கனவே ஆதிக்குடன் தான் அஜித் அடுத்த படம் நடிக்க போகிறார் என்ற ஒரு தகவலும் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் தனுஷும் அஜித்துக்கு இன்னும் சில நாள்களில் முழு கதையையும் சொல்லிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது வந்த தகவலின் படி வெங்கி அட்லூரியும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

வாடிவாசல் படத்திற்கு பிறகு ஒரு குறுகிய கால படைப்பாக சூர்யாவை வைத்து வெங்கி அட்லூரி ஒரு படம் பண்ணப் போவதாக சொல்லப்பட்டது. அந்தப் படத்தை முடித்துவிட்டு அஜித்துடன் இணையலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களும் அஜித்தை வளைத்து போட ரெடியாக இருக்கின்றனர். ஏற்கனவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்ட வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனமும் அஜித்தை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார்களாம்.

டான் பிக்சர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் என வரிசையாக தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரை அஜித் தேந்தெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story