Ajith: குட் பேட் அக்லி மெகா ஹிட்!.. அஜித்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அந்த தயாரிப்பாளர்!..

by Rohini |   ( Updated:2025-04-11 09:01:36  )
ajith_ug
X

ajith_ug

Ajith: அஜித் நடிப்பில் நேற்று ரிலீசாகி தொடர்ந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது குட் பேட் அக்லி திரைப்படம். எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது .படம் ரிலீஸ் ஆன முதல் காட்சி கொஞ்சம் மந்தமாக இருந்த நிலையில் மதியத்திற்கு பிறகு படம் தூள் கிளப்பி வந்தது. இன்று இரண்டாவது நாள் . இன்று இரவிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது.

வசூலில் ஒரு பெரிய சாதனையை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் ஜெயிலர். அந்த வசூலை முந்துமா என்பதை இன்னும் பத்து நாட்களில் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அஜித்தின் திரைப்படங்களிலேயே குட் பேட் அக்லி திரைப்படம் தான் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

முதல் நாளில் 35 கோடி என்ற அளவில் வசூலை பெற்றிருக்கிறது. இது ஒரு பெரிய வசூல் சாதனை என்று சொல்லலாம். படத்தில் கதை ஒன்றுமில்லை என்றாலும் தியேட்டரிக்கல் மெட்டீரியல் என்று சொல்லலாம் .ரசிகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள். இனி வரும் காலங்களில் கருத்தை சொல்லும் படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். இரண்டரை மணி நேரம் திரையரங்கிற்கு போகிறோமா ,நல்லா என்ஜாய் பண்ணிட்டு வருகிறோமா என்பதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

அதற்கு தீனி போட்ட படமாக இந்த குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்திருக்கிறது. அதுவும் அஜித் படம் எனும் போது இன்னும் ஒரு படி மேலாக கூடுதல் ஹைப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருச்சி ஸ்ரீதர் இதைப் பற்றி கூறும் பொழுது இந்த மாதிரி அஜித் தொடர்ந்து படங்களில் நடித்தால் தான் அவருடைய பெயரும் புகழும் இன்னும் நிலைத்து நிற்கும். எங்களுக்கும் நல்ல காசு வரும் என கூறியிருக்கிறார் .

அது மட்டும் அல்ல. இன்னும் வெளிவராத தகவல் ஒன்றை சொல்கிறேன். அஜித்தின் அடுத்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது இன்னும் அறிவிக்கப்படாத செய்தி. இந்த படத்தை இயக்கப் போவது யார் என்று எனக்குத் தெரியாது. அதைப்போல அஜித்தை வைத்து ஒரு பெரிய நிறுவனம் மற்றொரு படத்தையும் தயாரிக்கப் போகிறது.

அந்தப் படத்தை இயக்கப் போவதும் ஒரு பெரிய இயக்குனர் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. அதோடு தனுஷ் அஜித் கூட்டணி என்பது ஓரளவுக்கு பேச்சுவார்த்தையில் போய்க் கொண்டிருக்கின்றது. ஸ்கைப் வழியாக அஜித்திடம் கதை சொல்லி இருக்கிறார் தனுஷ் .அது எந்த அளவில் போகும் என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என திருச்சி ஸ்ரீதர் கூறினார்.

Next Story