குட் பேட் அக்லி படத்திலும் அந்த நடிகை!.. இவர் அஜித்தே விடவே மாட்டார் போல!....

by Akhilan |   ( Updated:2024-08-24 14:07:54  )
குட் பேட் அக்லி படத்திலும் அந்த நடிகை!.. இவர் அஜித்தே விடவே மாட்டார் போல!....
X

#image_title

Good bad ugly: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் மீண்டும் இணைய இருக்கும் நடிகை குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தினை முடித்துக்கொண்டு தன்னுடைய அடுத்த படத்தில் இணைந்து இருக்கிறார். குட் பேட் அக்லி என்ற பெயரில் உருவாகும் இப்படத்தினை ஆதிக் ரவிசந்திரன் இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இதையும் படிங்க: மீனாவிடம் சிக்கிய ரோகிணி.. குழம்பி நிற்கும் கோபி… தங்கமயில் செய்த பெரிய விஷயம்..

இப்படத்தின் படப்பிடிப்புகள் 40 சதவீதம் முடிந்து விட்ட நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறதாம். கிட்டத்தட்ட இக்கூட்டணி மீண்டும் உறுதியாகி இருக்கும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trisha

அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை திரிஷா தற்போது நடித்து முடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: கஜினி படத்தை மிஸ் செய்த பிரபல ஹீரோக்கள்... கல்பனா கேரக்டருக்கே நோ சொன்ன நடிகை…

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை திரிஷா திடீரென சறுக்கினார். தனி நாயகியாக நடித்தால் கூட அவர் படம் ஓடாமல் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்தார். அதிலிருந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.

தொடர்ந்து விஜயுடன் லியோ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று இருக்கிறார். இந்நிலையில் அஜித்துடன் தொடர்ச்சியாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பது அவருடைய சினிமா கேரியரை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story