அஜித் உடன் பஞ்சாயத்து பேச நான் தான் சென்றேன்.! சினிமா பிரபலம் மூலம் வெளிவரும் உண்மை.!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார் அஜித்குமார். இவரது திரைப்படங்களை திருவிழாவாக கொண்டாடுவதற்கு ஒரு பெரும் கூட்டமே தமிழகத்தில் இருக்கிறது. இவருக்கு ஒரு பழக்கம் உண்டு ஒருவரை அவர்க்கு மிகவும் பிடித்துவிட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பார்.
அவருடன் ஏதேனும் உரசல் ஏற்பட்டு விட்டால், பின்னர் அந்த பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார். இதுதான் அஜீத்தின் சுபாவம். ஆரம்பத்தில் அஜீத்தின் மேனேஜர் ஆக இருந்து பின்னர் தயாரிப்பாளராக வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.
ஆரம்ப காலகட்டங்களில் அஜித்தின் நிறைய படங்களை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் தயாரித்து வந்தார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி படத்திற்க்கு தேதி ஒதுக்கப்பட்ட பின்னர்தான் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தேதிகள் ஒதுக்கப்படும். அந்த அளவுக்கு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் தான் அஜித் தொடர்ந்து நடித்து வந்தார்.
பின்னர் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் இருவரும் இணைந்து ஒரு படம் கூட செய்யவில்லை. நிறைய படங்கள் தோல்வி எற்பட்டதால் நஷ்டக் கணக்கு காண்பித்ததால், இந்த பிரச்சனை ஏற்பட்டது என அப்போது சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்த பஞ்சாயத்து ஏற்பட்டது உண்மையா இல்லையா என்று பலரும் தெரியாமல் இருந்தனர். ஆனால் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சினிமா பைனான்ஸியர், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் இதற்கு சாட்சியாக ஒரு தகவல் கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் -லாபம் வந்தால் சம்பளம் தாங்க.! ரஜினியின் மனசுக்கு கிடைத்த பிரமாண்ட வெற்றி.! 15 வருட ரகசியம் இதோ..,
அவர் அண்மையில் பேசிய வீடியோ ஒன்றில்,' நான் விஜயுடன் நெருங்கி பழகியுள்ளேன். ஏன் என்றால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நண்பர் போன்றவர். ஆனால் அஜித்துடன் இணைந்து பேச பழக சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை. அவரை நான் ஒரு முறை சந்தித்தேன். அது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மற்றும் அஜித் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அந்த பஞ்சாயத்தை ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து தான் பேசி முடித்தார்களாம். அப்போது அந்த பஞ்சாயத்திற்கு நான் அங்கு சென்று இருந்தேன். அப்போது தான் அஜித்தையும் நான் சந்தித்து பேசினேன். அப்போது அஜித் மிகவும் தன்மையாக நடந்துகொண்டார். என்னிடம் பணிவாக பேசினார்.' என்று கூறினார்.
இவர் கூறியதன் மூலம் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்சனை இருந்தது உண்மைதான். பிறகு அது பஞ்சாயத்து பேசி தீர்க்கப்பட்டது. இருவரும் பிரிந்து சென்றனர் என்பது உறுதியாகியுள்ளது.