சம்பளம் இத்தனை கோடி! இல்லைனா ஓடு...! வந்த இயக்குனர்களிடம் பேரம் பேசிய அஜித்..!
தமிழ் சினிமாவில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி படிபடியாக பல வெற்றிப் படங்களை கொடுத்து இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஒரு உன்னதமான நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் அஜித். அந்த அளவுக்கு ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து இந்த உச்சத்தை அடைந்துள்ளார். ஆரம்பகாலங்களில் இவர் பேசுன பேச்சுக்கு எக்குத் தப்பான விமர்சனங்களை சந்தித்தவர்.ஆனால் இன்று அவர் பேசமாட்டாரா என ஆதங்கத்துடன் பார்க்க வைத்துள்ளார்.
தன் தொழிலையே நம்பி இருப்பவர். தொழில் பக்தி அதிகம் உடையவர். இவர் முதன் முதலில் சினிமாவிற்குள் நுழைந்தது ஒரு தெலுங்கு சினிமா மூலம் தான். 1992 ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். அஜித் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் கே. ராஜன் நடிகர் அஜித்தை பற்றி ஒரு தகவலை கூறியுள்ளார். தொடர் தோல்வி படங்கள் வந்தாலும் தன் சம்பளத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் சொல்லப் போனால் 40 கோடி உயர்த்தியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.
என்ன ஆளு பாருங்க விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்கள் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. ஆனால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் என் அடுத்த படத்திற்கு ஒரு 25 கோடியை குறைந்திருக்கிறேன் என்று தானே சொல்ல வேண்டும். ஆனால் 40 கோடி உயர்த்தி வீட்டிற்கு வருபர்களிடம் 100 கோடி என்றால் உள்ளே வா. இல்லையென்றால் வரவேண்டாம் என்பது மாறி அல்லவா கூறிகிறார் என்று தன் ஆதங்கத்தை கூறினார் கே.ராஜன்.