அஜித்திற்கு பிடிக்காத ஒரே நடிகர்...! நாசுக்கா சொல்லி மாட்டிக் கொண்ட பிரபலம்...!
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தல என்றும் ஏகே என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர். இவர் கடைசியாக எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை படத்தில் நடித்து முடித்து அடுத்த படமும் அவரின் இயக்கத்திலயே நடித்திக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் நடிகர் அஜித். எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாதவர், மேடை பேச்சுக்களை தவிர்ப்பவர், பொது இடங்களில் காணப்படாதவர் என ஒரு முத்திரையே இவர் மேல் திணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வலைப்பேச்சு புகழ் அந்தனனிடம் அஜித்திற்கு என்று திரை வட்டாரத்தில் நெருங்கிய நண்பர்கள் யாரேனும் உள்ளார்களா? என கேட்க அப்படி யாரும் இல்லை. ஆனால் அஜித்திற்கு பிடிக்காத ஒரு நடிகர் இருக்கிறார் என்று புதிய குண்டை தூக்கிப் போட்டார்.
அவர் வேறு யாருமில்லை. தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பி நடிகர்களாக வலம் வருபவர்களில் அண்ணன் நடிகரை தான் அஜித்திற்கு பிடிக்காது என கூறினார். அவர் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அண்ணன் தம்பி நடிகர்கள் என்றால் சூர்யா மற்றும் கார்த்தி. அதில் அண்ணன் நடிகர் சூர்யா தான். இவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று அந்தனன் கூற மறுத்து விட்டார்.