அஜித்திடம் இருக்கும் கொடூர குணம் என்ன தெரியுமா?!...ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பிரபலம்...
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜயும் சரி அஜித்தும் சரி இரு துருவங்களாக நின்று சினிமாவை ஆண்டு கொண்டிருக்கின்றனர். இருவருமே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். படத்திற்கு படம் இவர்களின் சம்பளம் கூடிக்கொண்டே இருக்கின்றது.
நடித்த படம் வெற்றியோ தோல்வியோ ஆனால் சம்பளம் மட்டும் கூட வேண்டும் என்ற மனப்பாங்கு அஜித்திற்கு அதிகமாகவே இருக்கின்றது என பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் தெரிவித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் ஏற்கெனவே நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களும் எச். வினோத் இயக்கத்தில் வெளியான படங்களாகும்.
அந்த இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் மூன்றாவது படமும் வினோத் இயக்கத்தில் தான் தயாராகி வருகிறது. இதற்கு பின்னனியில் அஜித் சமீபகாலமாக இயக்குனர்களுக்க் மூன்று படங்கள் வீதம் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை பற்றி கே.ராஜன் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
அதாவது இரண்டு படங்கள் தோல்வியடைந்தாலும் அந்த இரண்டு படங்களுக்கு அஜித் வாங்கிய சம்பளம் 65 கோடி. ஆனால் இந்த படத்திற்கு 105 கோடி.வெற்றியடைந்தால் கூட்டியிருக்கலாம். ஆனால் இரண்டு படங்களுமே தோல்வி.
முதலில் அஜித் நன்றாகத் தான் இருந்தார். நிறைய பாராட்டிக்கிறேன். ஆனால் இந்த கொடூரக்குணம் அஜித்திற்கு வந்திருக்கக் கூடாது. நான் கேள்விப்பட்டது தான். அப்படி இல்லையென்றால் பாராட்டுவேன். மற்றவர்கள் நஷ்டமடைய விடக்கூடாது.மூன்று படங்களுக்கு சம்பளத்தை பிரித்துக் கொடுத்தால் மற்றவர்களும் பயனடைவார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.