சண்டை காட்சியில் தவறி விழுந்த அஜித்.! படம் டிராப்.!? வேதனையின் உச்சத்தில் இயக்குனர்.!

அஜித் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் கைமாறியுள்ளன. காக்க காக்க, ஜெமினி, தூள் என பலவேறு திரைப்படங்களை இந்த லிஸ்டில் வைத்து கொள்ளலாம். இன்னும் சில படங்கள் ஷூட்டிங் தொடங்கி கூட நின்றுள்ளன.
அப்படி ஒரு திரைப்படம் தான் மகா. இந்த படத்தை அறிவிக்கையில் அறிமுக இயக்குனர் ரவிராஜா என்பவர் இயக்குகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது என ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது டிராப் ஆகி போனது.
அதன் பிற்காடு ரவிராஜா , தனது பெயரை நந்தா பெரியசாமி என மாற்றிக்கொண்டு தான் முதல் படமான ஒரு கல்லூரியின் கதை என தனது இயக்குனர் பயணத்தை ஆரம்பித்தார். இவர் அண்மையில் அஜித் படம் டிராப் ஆனது ஒரு நேர்காணலில் குறித்து பகிர்ந்து கொண்டார்.
இதையும் படியுங்களேன் - படதலைப்பு ஒரு கோடியாம்.! ரஜினி கம்பேக் ஹிட் கொடுத்த படமாச்சே.?! வாரி வவழங்கும் டான் நிறுவனம்.!
அதாவது, அந்த சமயம் அது பெரிய ஆக்சன் படம். சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. சண்டை காட்சி இறுதி கட்டத்தை எட்டும் போது அஜித் கீழே விழுந்து முட்டியில் பலத்த காயம். அதனால் அறுவை சிகிச்சை செய்து 5 மாதம் கழித்து தான் ஷூட்டிங் நடத்த வேண்டிய கட்டாயம்.
அந்தசமயம் தான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்னை எழுந்தது. அதனால் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லாமல் படம் டிராப் ஆகிப்போனது என மிகுந்த வருத்தத்துடன் அந்த நேர்காணலில் நந்தா பெரியசாமி குறிப்பிட்டு இருந்தார்.