மாஸ் ஹிட் கொடுத்த அந்த படம் அஜித்துக்காக எழுதுனது இல்லையாம்! – சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!..

Published on: April 10, 2023
---Advertisement---

தமிழின் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்.

நடிகர் அஜித்தின் பல திரைப்படங்கள் தமிழில் மாஸ் ஹிட் கொடுத்துள்ளன. தற்சமயம் அஜித்திற்காக படம் எடுக்கும் இயக்குனர்கள் அவருக்காக கதையை மாற்றி எழுதும் அளவிற்கு அவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டது.

ஆனால் அவருக்காக எழுதப்படாத ஒரு கதையில் அவர் நடித்து ஹிட் அடித்த சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. 1999 ஆம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி நடித்து வெளிவந்த திரைப்படம் அமர்களம். வெளிவந்த காலக்கட்டத்திலேயே மக்கள் மத்தியில் இந்த படம் வெகுவான வரவேற்பை பெற்றது.

அஜித்திற்கு எழுதாத கதை:

இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். உண்மையில் இந்த படத்தின் கதையை சரண் எழுதும்போது அதில் அஜித்தின் கதாபாத்திரமே இல்லை. நாசருக்கும், ரகுவரனுக்கும் நடக்கும் சண்டைகளை வைத்தே படத்தை கொண்டு போக நினைத்தார் சரண்.

ஆனால் அவர்கள் இருவருமே அப்போது பெரும் நட்சத்திரமாக இல்லை. மேலும் இவர்கள் இருவரையும் இணைப்பதற்கான ஒரு விஷயம் படத்தில் தேவைப்பட்டது. அதற்காகதான் அஜித் கதாபாத்திரத்தை உருவாக்கினார் சரண். சொல்லப்போனால் அந்த படத்தில் இறுதியாகதான் அஜித்தை உள்ளே கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அந்த படம் தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது என கூறலாம்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.