அஜித்துடன் காதல் வயப்பட்ட நடிகைகள்!.. படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் அஜித் ஒரு காலத்தில் பெண்களை வசீகரிக்கும் காதல் மன்னனாக திகழ்ந்து வந்தார். ஆணழகனாக தமிழ் சினிமாவில் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட நடிகர் அஜித். அரவிந்த்சாமிக்கு பிறகு பெண்களை கொள்ளை கொள்ளும் கள்வனாக அஜித் திகழ்ந்தார்.
அதுவும் அவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன், கண்டுகொண்டேன், கண்டுகொண்டே போன்ற படங்கள் ஒரு பக்கம் ஹிட் ஆனாலும் இந்த படங்களில் அஜித் அவ்ளோ அழகாக இருப்பார். இந்தப் படங்களில் நடித்ததில் இருந்தே அவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமாக பெருகிவிட்டனர்.
மேலும் அஜித் வாழ்க்கையில் ஒரு சில காதல் சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறதாம். ஏற்கெனவே ஷாலினியை காதலித்து திருமணம் செய்தவரானாலும் அதற்கு முன் அஜித் காதலில் இருந்தார் என்றும் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
அதாவது காதல் கோட்டை , காதல் மன்னன் போன்ற படங்களில் நடித்த சமயம் பிரபல நடிகையும் அஜித்தும் காதலிப்பதாகவும் இருவரும் சேர்ந்து ஈசிஆரில் தனி பங்களா எடுத்து தங்கி வருவதாகவும் பல கிசுகிசுக்கள் வந்தததாம். ஆனால் அதெல்லாம் உண்மை என்று செய்யாறு பாலு கூறினார்.
இதை பற்றி அப்பவே அஜித்திடம் கேட்டபோது என் சொந்த வாழ்க்கையில் நுழைய யாருக்கும் உரிமை இல்லை என்று டென்ஷனில் கத்தி விட்டாராம். அந்த செய்தி அப்படியே நின்று விட்டதாம். ஆனால் அந்த நடிகை காதல் கோட்டை படத்தில் நடித்த ஹீரா என்றே பல ஊடகங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
மேலும் கூறிய செய்யாறு பாலு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித் செம அழகா இருப்பாராம். அப்போது படப்பிடிப்பில் நடிகை தாபு உட்கார்ந்திருப்பாராம். எதிரே அஜித்தும் உட்கார்ந்திருப்பாராம். தபு அஜித்தை வச்ச கண்ணு வாங்காமல் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பாராம். அந்த அளவுக்கு அஜித்தை ரசித்தாராம் தபு.
இதையும் படிங்க : எந்த தமிழ் பொண்ணும் அப்படி சொல்லமாட்டாங்க! – குஷ்புவின் பேச்சுக்கு பதிலளித்த பயில்வான்…
என்ன இருந்தாலும் தனக்கு எதிரே ஒரு ஆணழகன் இருக்கும் போது எந்த பொண்ணுக்குத்தான் பார்க்காமல் இருக்க தோன்றும். இந்த செய்தியையும் செய்யாறு பாலுதான் கூறினார்.