Connect with us

இனிமேல் என்னை தல என்று அழைக்க வேண்டாம்….. அஜித்தின் திடீர் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி…..

ajith

Cinema News

இனிமேல் என்னை தல என்று அழைக்க வேண்டாம்….. அஜித்தின் திடீர் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி…..

பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ரசிகர்கள் அடைமொழி வைத்து அழைப்பது வழக்கம். இது இப்போது அல்ல எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே உள்ளது. புரட்சி தலைவர், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார், உலக நாயகன், தல, தளபதி என ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு அடைமொழி வைத்து ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இனி யாரும் என்னை அடைமொழி வைக்கப்பட்டு அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ரசிகர்கள் இனிமேல் தன்னை தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

ajith statement

தல என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித்குமார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்தின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதுவரை அஜித்தை அவர் பெயர் சொல்லி அழைத்ததைவிட தல என்று ரசிகர்கள் அழைத்ததுதான் அதிகம். அஜித்தின் படம் வெளியாகும் போது தல என்று உரக்க கத்தி விசிலடித்து சிலாகிக்கும் ரசிகர்கள் அஜித்தின் இந்த அறிக்கையால் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top