Connect with us
banner

அஜித் கூறும் குட்டி கதை.?! ஊர் வாயை மூடவே முடியாது.! வைரலாகும் கழுதை, தம்பதி.!

ajith_main_cine

Cinema News

அஜித் கூறும் குட்டி கதை.?! ஊர் வாயை மூடவே முடியாது.! வைரலாகும் கழுதை, தம்பதி.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் அஜித்குமார். இவர் தனது வேலை நடிப்பது மட்டுமே, எனஅதில் மட்டுமே கவனம் செலுத்துவார். மற்றசினிமா நிகழ்ச்சிகளிலோ, வேறு நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்ள மாட்டார்.

ajith_main_cine

இவர் தான் ஏதேனும் செய்தியை ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதனை தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா அவர்கள் மூலமாக தெரிவிப்பார். அஜித்துக்கு என தனி டிவிட்டர் அக்கவுண்ட் ஏதும் கிடையாது.

அப்படி இருக்க , சுரேஷ் சந்திரா இன்று புகைப்படம் பதிவிட்டு, அதில் இந்த புகைப்படம் இதோடு தொடர்புடையவருக்கு , அளவற்ற அன்பு அஜித் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள், அஜித் ஏதேனும் இவர் மூலம் குட்டி கதை கூறுகிறாரோ என்று குழம்பி போயுள்ளனர். அதில் நமக்கு மிகவும் பரிட்சையமான. ஒரு தம்பதி, ஒரு கதையுடன் செல்வார்கள். அப்போது அந்த கழுதையை முதலில் நடக்க வைத்து செல்வார்கள் ஊர் மக்கள் அதான் கழுதை இருக்கிறதே அதில் ஏறி செல்லுங்கள் என கூறுவார்கள்.

இதையும் படியுங்களேன் – சார் உங்க பேச்சை நிறுத்துங்க., கமலிடம் குறுக்கிட்ட மோகன்லால்.! இது ‘பிக்’ பஞ்சாயத்து மேட்டர்.!

தம்பதியினர் கழுதை  மேல் ஏறியதும், அந்த கழுதை எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பார்கள். அதே கணவன் மட்டும் அதில் ஏறி வந்தால், கணவன் கெட்டவன், மனைவி மட்டும் கழுதை மீது ஏறி வந்தால் மனைவி கெட்டவள், கழுதையை இருவரும் தூக்கி சென்றால் தம்பதியினர் முட்டாள். ஊர் வாய் ஏதேனும் ஒன்றை சொல்லிக்கொண்டு தான் இருக்கும். நமக்கு சரி என எது படுகிறதோ அதனை செய்துவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.

உண்மையில், இந்த அறிவுரையை அஜித் கூறியதன் பெயரில் பதிவிடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top