தமிழ் சினிமாவில் இன்று ஒரு மாபெரும் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து இன்று ஒட்டுமொத்த தமிழகமும் போற்றும் நடிகராக வளர்ந்திருக்கிறார். ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வந்த அஜித் தனக்கு அடுத்து வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு ஒரு பாடமாகவும் இருந்து வருகிறார்.
பொதுவாக அஜித்தை பொறுத்தவரைக்கும் எந்தவொரு பொது மேடையிலும் கலந்து கொள்ளாமல். ரசிகர்களை சந்திக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். பப்ளிசிட்டி பிடிக்காத ஒரு தன்னடக்கமான மனிதராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அஜித் நடிக்க இருந்த படத்தில்தான் நான் நடித்தேன் என நடிகர் விக்னேஷ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
விக்னேஷ் என்றாலே எல்லாருக்கும் நியாபகம் வருவது ‘ஆத்தங்கரை மரமே ’என்ற பாடல்தான். கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் ஹீரோ என்ற அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை.
இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘என்னைத் தாலாட்ட வருவாளா’ திரைப்படம். கே.எஸ். ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் அஜித் கேமியோ ரோலில்தான் நடித்திருப்பார். ஆனால் லீடு ரோலில் நடிக்க வேண்டியவர்தானாம்.
இந்தப் படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். அந்த நேரத்தில் மாணிக்கம் நாராயணனுக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட தயாரிப்பு கவுன்சில் வரை இந்த பிரச்சினை பெரிதாகிவிட்டதாம். அதனால் பாதியிலேயே அஜித் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். அதன் பிறகு தனியாக ஒரு கதையை தயார் செய்து அதில் அஜித் போர்ஷனையும் சேர்த்து லீடு ரோலில் விக்னேஷை நடிக்க வைத்தார்களாம்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…