பாடி தாங்காது வேணாம் அஜித் விட்ருங்க.! என்ன காரியம் செய்ய போகிறார் தெரியுமா.?!

Published on: March 3, 2022
---Advertisement---

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ஈட்டி வருகிறது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அதன் பிறகு உடனே சுதாரித்துக்கொண்ட படக்குழு படத்தில் 15 நிமிடத்தை குறைத்து மீண்டும் ஆடியன்ஸை கவர்ந்துள்ளது.

ajith

இந்த படத்தை அடுத்து மீண்டும் அஜித் – H.வினோத் – போனி கபூர் கூட்டணி இணைய உள்ளது. அந்த படத்திற்கு தற்போது AK61 என தற்காலிகமாக ஒரு தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடம் என ஒரு குரூப் சொல்கிறது. அதில் ஒரு வேடம் வில்லன் என ஒரு குரூப் சொல்கிறது. எது எப்படியோ படம் நன்றாக இருந்தால் போதும் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்களேன் – இதுவரை ஏன் ஷங்கர் அஜித்தை வைத்து படம் இயக்கவில்லை தெரியுமா.?! பகீர் கிளப்பும் பின்னணி இதுதான்.!

இந்நிலையில், ஏற்கனவே அஜித் வெள்ளை தாடி மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதுதான் அஜித்தின் அடுத்த பட கெட்டப் என்று கூறப்பட்டது. அதனை உறுதி படுத்தும் வகையில், போனி கபூர் அந்த வெள்ளை தாடி போட்டோவின் நெகட்டிவ் புகைப்படத்தை தான் AK61 என அறிவித்தது.

தற்போது மேலும், ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது, படத்தில் அஜித் தனது உடல் எடையை குறைக்க வேண்டுமாம். அதாவது அஜித்தின் இன்னோர் இளமையான கதாபாத்திரத்திற்கு சுமார் 25 கிலோ எடை குறைக்க வேண்டுமாம்.  அதற்கான தீவிர முயற்சியில் அஜித் ஈடுபட்டுள்ளாராம். ஏற்கனவே அஜித் உடம்பில் ஏகப்பட்ட ஆபரேஷன்கள் நடந்துள்ளது. இதில் இது வேணாம் என பலர் கூறி வருகின்றனர். அவர் திரையில் வந்தால் மட்டும் போதும் என ரசிகர்கள் கூறுகிறார்கள். தனது ரசிகர்களுக்கு இதனை செய்தாக வேண்டும் என அஜித் களமிறங்கியுள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment